முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் அருகே வாகனத்தில் பணம் அ.தி.மு.க. புகார்: அதிகாரிகள் ஆய்வு

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மேலூர்,மார்ச்.- 21 - மேலூர் அருகே வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பணத்தை எடுத்து சென்ற வாகனங்களை அதிகாரிகள் சோதனையிடவே இல்லை என அ.தி.மு.க.வினர் புகார் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் மேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் 10 க்கும் மேற்பட்ட கார்கள் மத்திய அமைச்சர் ஒருவரது முன்னிலையில் அணிவகுத்து சென்றன. அந்த கார்களில் டி.என். 07 ஏ.பி. 1769 என்ற எண்ணுள்ள காரில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த புகாரை அடுத்து நாவினிப்பட்டி மேலூர் பிரிவில் தாசில்தார் காளிமுத்து உட்பட அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காரில் பணம் இல்லை என தெரியவந்ததை தொடர்ந்து கார் அனுப்பப்பட்டது. 

பணக்கட்டுகளை வேறு வாகனங்களில் மாற்றி அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகமடைந்த அப்பகுதி அ.தி.மு.கவினர் மேலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முறையான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் துறை எஸ்.பி. சின்னச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சு நடத்தியதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்