முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 21 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பிப். - 19 - பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள குராம் பழங்குடியின பகுதியில் மசூதி அருகே நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயமடைந்தனர்.  பாராசினார் மார்க்கெட் பகுதியில் மசூதி அருகே பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் திடீரென தனது உடலில் கட்டியிருந்த பெல்ட் வெடிகுண்டை வெடிக்க செய்தார். அப்போது மார்க்கெட்டில் அதிகளவிலான மக்கள் நடமாட்டம் இருந்தது. காயமடைந்த அனைவரும் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலில் மார்க்கெட்டில் இருந்த பல கடைகள் சேதமடைந்தன. முதலில் இது ஒரு கார் குண்டு வெடிப்பு என கருதிய போலீசார் பின்னர் நடத்திய விசாரணையில் தற்கொலை படை தாக்குதல் என்பதை உறுதி செய்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த பழங்குடியின பகுதியில் ஷியா மற்றும் கன்னி பிரிவு முஸ்லீம்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருவதாகவும், இந்த தாக்குதல் அதன் ஒரு பகுதியாகவே நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் சன்னி முஸ்லீக்களை தலிபான் பயங்கரவாதிகள் ஆதரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்