முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வாழ் இந்தியர் கமலுக்கு சர்வதேச விருது

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பிப். - 20 - அமெரிக்கவாழ் இந்தியர் கமல் பவா, சிறந்த அறிவியல் பணிக்கான உலகின் முதன்மையான விருதான குன்னொஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீடித்த வளர்ச்சிக்கான ஆய்வு தொடர்பாகவே இவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. பாஸ்டனில் உள்ள மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார் கமல். மலைக் காடுகளின் உயிரினத் தொகுப்பு குறித்த இவரது ஆய்வு குறிப்பிடத்தக்கது. ராயல் நார்வீஜியன் சொசைட்டி ஆப் சயின்ஸ் அண்டு லெட்டர்ஸ் என்ற அமைப்பு நீடித்த வளர்ச்சிக்கான குன்னொஸ் விருதை இவருக்கு வழங்கவுள்ளது. நார்வேயில் உள்ள டிரோந்தெய்ம் நகரில் ஏப்ரல் 17 ம் தேதி நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் கமலுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony