முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வ.கம்யூனிஸ்ட் செயலாளராக தா.பாண்டியன் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

ராஜபாளையம், பிப்.21 - வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளராக தா.பாண்டியன் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாடு நடந்தது. மூன்றாவது நாளான நேற்று முன்தினம் (19.2.2012)முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதுடன்,  மாநிலச் செயலாளர் தேர்வும் நடைபெற்றது. 125 பேர் கொண்ட மாநிலக் குழுவினர் ஒட்டுமொத்தமாக தா.பாண்டியனை 3-வது முறையாகவும் மாநிலச் செயலாளராக ஏகமனதாகத் தேர்வு செய்தனர்.  இதை தேசிய செயலாளர் து.ராஜா மேடையில் அறிவித்தார். தா.பாண்டியனுக்கு செவ்வாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பின்னர் தா.பாண்டியன் ஏற்புரை நிகழ்த்தினார். 

மாநாட்டில் மொத்தம் 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கடுமையான மின்வெட்டைக் குறைக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கைப் பிரச்சனையில் இன்னும் 21 முள்வேலி முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்த உடனடியாக மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்வேறு உயிரிழப்பு, உடமை இழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு இலங்கை அரசு நிவாரணம் வழங்கி போர்க்குற்றவாளியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவை அறிவித்து விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். 

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எவ்வளரு உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் உட்பட தீர்ப்புகள் வழங்கிய நிலையில் இன்னும் கேரள அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. உடனடியாக இப்பிரச்சனைக்கு மத்திய அரசு தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியிலிருந்து மாநாட்டு நிறைவுப் பேரணி துவங்கியது. மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், காந்திசிலை ரவுண்டானா, சத்திரப்பட்டி பி.ஏ.சி.ஆர். சாலை வழியாக பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளி மைதானம் வந்தடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முக்கிய தலைவர்கள் பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago