முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்​21 - சர்வர் சுந்தரம், விருமாண்டி, உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 85.  கடந்த சில வாரங்களுக்க முன்பு படப்பிடிப்பு தளத்தில் வழுக்கி விழுந்ததில் அவரது தண்டுவடத்தில் பலத்த அடிப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை... இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் இன்று நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.    தமிழின் சிறந்த நடிகைகளின் பட்டியலைத் தயாரித்தால் முதல் பத்துக்குள் இடம் பிடிப்பார் எஸ்.என்.லட்சுமி. மூன்று தலைமுறை ரசிகர்களை தனது நடிப்பால் ஈர்த்த மகத்தான நடிகை இவர். வயதானவர்களுக்கு சர்வர் சுந்தரம், துலாபாரம் முதலியன இவர் நடித்தப் படங்களில் மறக்க முடியாதவை. அதேபோல் இளம் வயதினருக்கு மைக்கேல் மதன காமராஜன், மகாநதி, விருமாண்டி என கமலின் பல படங்கள். இன்றைய இல்லத்தரசிகளுக்கு பல தொலைக்காட்சி தொடர்கள்.

நகைச்சுவை, குணச்சித்திரம், ஆக்ரோஷ சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் அனாயசமாக நடித்த இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் என்.எஸ்.லட்சுமி. என்.எஸ்.கே. எம்ஜிஆர், சிவாஜி என தமிழின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள இவர் நடிப்பு மீதிருந்த காதலால் திருமணம் செய்து கொள்ளவில்லை. பல திரைப்படங்களில் அம்மா, பாட்டி வேடங்களில் நடித்துள்ள இவர் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவாஸ்டேஜ், ஞானதேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடக கம்பெனிகள், கே.பாலசந்தரின் ராஹினி கிரியேஷன்ஸ் உள்ளிட்ட நாடக கம்பெனிகளிலும் நடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago