முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத எதிர்ப்பு மையம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, பிப். 21 - தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெய லலிதா மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். தேசிய தீவிரவாதம் எதிர்ப்பு மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சக ம் திட்டமிட்டு உள்ளது. இது தொடர் பாக மாநில முதல்வர்களுக்கு கடிதமும் எழுதப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா,  ஒரிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேச மாநிலம் ஆகிய மாநிலங்கள் உள்பட காங்கிரஸ் அல்லாத முதல்வர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது மாநில அதிகாரத்தில் தலையிடுவது ஆகும். இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்று கடந்த 17 -ம் தேதி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி இருந்தார். 

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலி தா மீண்டும் ஒரு கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் மத்திய அரசு, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்ப து தொடர்பான திட்டத்தை உடனடி யாக கைவிட வேண்டும் எனவும் அது தொடர்பாக, மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.  தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், உள்ள சில பிரிவுகளை ஆழமாக பரிசீலனை செய்ய வேண்டு ம் என்று கடந்த 17 -ம் தேதி தாம் எழு திய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதை நினைவு கூர்ந்துள்ள முதல்வர் ஜெய ல லிதா சம்பந்தப்பட்ட பிரிவுகள் குறித்து பிற மாநில முதல் அமைச்சர்கள் வெளி யிட்டு உள்ள எதிர்ப்பு கருத்துக்களுடன் தாம் உடன்படுவதாக தெரிவித்து உள்ளார். 

மேலும் வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ள அத்தி ட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, பொது ஒழுங் கு மற்றும் காவல் துறை மாநில வரம் பிற்குள் வருவதால் அனைத்து மாநில அரசுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் மீண்டும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்