முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழை மக்களுக்கு ஆடு, மாடுகள் வழங்கியவர் முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

வந்தவாசி.பிப்,21 - திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டமும், தமிழக முதல்வர் ஜெயலலிதா 64வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை கூட்டமும் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் ஏ.ஜெ.திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெமினி கே.இராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர். செய்யாமூர் கே.குணசீலன், போளூர் எம்.எல்.ஏ எல்.ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்தவாசி சட்டமன்ற தொகுதி கழக செயலாளர் கே.பாஸ்கர் ரெட்டியார் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக வருவாயத்துறை அமைச்சரும் தலைமை நிலைய கழக செயலாளருமான கே.செங்கோட்டையன், அதிமுக அமைப்பு செயலாளர் ப.பாண்டியன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் அசேன் மற்றும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னாள் சபாநாயகர் பேசும்போது வந்தவாசி மண் வரலாறு சிறப்புமிக்கது. தமிழக முதல்வர் கழகம் வளர்ச்சி பாதையில் செல்வதற்காக கழகத்தில் இருந்து 15பேரை க்கி உத்திரவிட்டார். உங்கள் உழைப்பை யாரும் சாப்பிட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை, 40 ஆண்டு காலமாக நான் செங்கோட்டையன், பன்னீர்செல்வம் போன்றோர் ராமா ராமா என்று எம்.ஜி.ஆர் ஐ சுற்றுவந்தோம். அப்போது சிலகாலம், சிலர் இரவணா, இரவணா என்று சுற்றி வந்தனர். அவர்களை வெளியேற்றி முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் உங்களுக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆணவ பேச்சுக்கள் பேசிய 15பேரின் ஆட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. மணல், கிரானட்ை, டெண்டர் கொள்ளைகள் நடத்திய கூட்டம் முதல்வரால் ஓதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை நம்பினோர் யாரும் கைவிடப்படார். இப்போது இருப்பது ஓரே அணிதான் அது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கீழ் உள்ள உங்கள் அணிதான். தொண்டர்கள்தான் கழகத்தை வழி நடத்தி வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியையும் கைப்பற்ற உறுதி ஏற்போம் இவ்வாறு அவர் பேசினார். கே.செங்கோட்டையன் பேசும் போது. தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் தமிழக முதல்வர் அதனால்தான் மாணவர்களுக்கு வசதியாக கல்வி பயில இந்தியவிலேயே முதன்முறையாக இலவச மடிகணினி, ஏழை பெண்களுக்கு திருமணத்திற்க்கு 4கிராம் தங்கம், பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50ஆயிரம், வயதானமுதியோர்களுக்கு ரூ.1000 என பலதிட்டங்களை சமூக சிந்தனையுடன் அறிவித்தார். நமது முதல்வர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்தபோது சந்தித்து பேசிய முதல்வர் நமது முதல்வர் இந்திய வறுமை இல்லாத நாடாகவும் எல்லைப்பகுதியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தவும். இந்திய நதிகள் தேசியமயமாக்கப்படவும் எதிர்கால இந்தியாவை நமது தமிழக முதல்வர் தலைமை ஏற்கப்படவேண்டும். என பேசினார். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது அதிமுக வில் சாதாரண தொண்டராக இருப்பதே பெருமை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை மக்களுக்கு மத்திய அரசு வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 33,000 வழங்குகிறது. அதை வைத்துக்கொண்டு 20சதவீத வீட்டை கூட கட்ட முடியாது என உணர்ந்து அவர்களுக்கு கூடுதலாக மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.66,500 சேர்த்து தமிழக அரசு உதவுகிறது. ஓரு கோடியே 85லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு 20கிலோ இலவச அரிசி முதல்வரால் வழங்கப்படுகிறது. 300சதுரடி பரப்பளவில் 1.8லட்சம் மதிப்பீட்டில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பசுமை வீடுகள் கட்டித்தரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஏழைமக்கள் பொருளாதார வளர்ச்சி அடைய  இலவச மாடு, ஆடு மற்றும் மிக்சி, கிரைண்டர், மின்விசறி ஆகியவற்றை வழங்கி ஏழைமக்களை முன்னேற்றுகிறார். நமது முதல்வர் என பேசினார். நிகழ்ச்சியில் வந்தவாசி ஓன்றிய ஆர்.அர்ஜீணன், தொகுதி கிளை செயலாளர் என்.கே.ஏ.லோகநாதன், தெள்ளார் ஓன்றிய செயலாளர் டி.வி.பச்சையப்பன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட தலைவர் ஜெ.பாலு முதலியார், மாவட்ட செயலாளர் டி.கே.பி.மணி, மாவட்ட அம்மா பேரவை துணைத்தலைவர் எஸ்.தர்மதுரை தெள்ளார் ஓன்றிய அவைத்தலைவர் பி.முனிரத்தினம், வந்தவாசி நகர செயலாளர் எம்.பாஷா, தெள்ளார் ஓன்றிய குழு தலைவர் சி.சீனிவாசன், ஓன்றிய துணை செயலாளர் சேகர், கிறிஷ்டிவிஜயன், ஓன்றிய குழு உறுப்பினர்கள் சக்கரபாணி, தியாகராஜன், சி.கே.பாஸ்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இறுதியாக அதிமுக முன்னணியினர் 64பேருக்கு இலவச மீதிவண்டிகளை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்