முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருக்கோவிலூர் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பி.21 - திருக்கேவிலூரில் இருளர் இனப்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இருளர் இனப்பெண்கள் கற்பழிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றத்தல்  டி.ஜி.பி. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது விழுப்புரம் மாவட்டம், திருக்கேவிலூர் அருகே இருளர் சமூகத்தை சேர்ந்த 4 பெண்கள் காவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.4 இருளர் இன பெண்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தைல மர காட்டுக்குள் வைத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி மனு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்னிலையில் நடந்து வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இது தொடர்பாக உள்துறை செயலர், டி.ஜி.பி பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உள்துறை செயலர், டி.ஜி.பி சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது: பாலியல் குற்றச்சாட்டு கூறிய 4 இருளர் இனப்பெண்களிடமும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அந்த பெண்கள் கற்பழிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அந்த பெண்கள் பலாத் காரமும் செய்யப்பட வில்லை என்பது சோதனைகள் மூலம் உறுதியாகி உள்ளது.பலாத்காரம் நடந்த ஒருவாரத்திற்கு பிறகே மருத்துவப் பரிசேதனை நடந்தது என்றும் ஆய்வு தாமதத்தால் பலாத்காரம் நடந்ததை உறுதி செய்ய இயலவில்லை மேலும், .4 இருளர் இனப்பெண்களை இரவு நேரத்தில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தது சட்டவிரோத மாகும். இதற்காக 7 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸ்காரர்கள் யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் எங்களுக்கு இல்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. . 

மேலும் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்