முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்ல வாய்ப்பை இழந்து விட்டோம் - சம்மி புலம்பல்

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 22 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான கடைசி லீக்கில் நாங்கள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அதனை நழுவ விட்டு விட்டோம் என்று மே.இ.தீவு அணியி ன் கேப்டன் டேரன் சம்மி தெரிவித்து இருக்கிறார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் சென் னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் இந்தியா மற் றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதின. 

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 80  ரன் வித்தியாச த்தில் மே.இ.தீவு அணியை தோற்கடித்து அதிக புள்ளிகள் பெற்று பட்டியலில் முன்னேறியது. இந்த வெற்றி காலிறுதி வாய்ப்பை பெற்றுத் தந்தது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் 23 -ம் தேதி துவங்குகிறது. இந்திய அணி காலிறுதியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது. கடைசி லீக்கில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த மே.இ.தீவு அணி கேப்டன் டேரன் சம்மி இந்தத் தோல்வி குறித்து நிருபர்களிடம் தெரிவித்ததாவது - 

நாங்கள் ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன் என்ற வலு வான நிலையில் இருந்தோம். வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொள்ளாமல் தவற விட்டோம். இப்படி விக்கெட் சரிவது இது 3 -வது முறையாகும். 

தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக இப்படித்தான் நடந்தது. நல்ல வேளையாக லீக் ஆட்டம் என்பதால் பிரச்சினை இல்லை. விக்கெட்டுகள் சரிவது கவலை அளிக்கிறது. 

யுவராஜ் சிங் மிகவும் அபாயகரமாக பேட்டிங் செய்தார். பந்து வீச்சி லும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். டெண்டுல்கர், காம்பீர், ஆகியோரை எளிதில் அவுட் செய்தோம். யுவராஜ் சிங்கின் 2 கேட்ச்சுகளை நான் தவற விட்டேன். இதை அவர் சரியாக பயன் படுத்திக் கொண்டு சதம் அடித்தார். கேட்ச் தவற விட்டது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 

பாகிஸ்தானுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம். நாங்கள் பாகிஸ்தானை தோற்கடித்து,  இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், நாங்கள் அரை இறுதியில் இந்தியாவை பழி தீர்ப்போம். கால் இறுதியில் கிறிஸ் கெய்ல் விளையாடுவா

ர். இவ்வாறு டேரன் சம்மி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்