முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் அதிபர்கள் பேச்சுவார்த்தை

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,பிப்.22 - அமைதி நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினர். போரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அமைதி நடவடிக்கைகளுக்கு அண்டை நாடுகளான ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் அமைதி நடவடிக்கை குறித்து பாகிஸ்தான்-ஈரான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்தும் கர்சாயுடன் ஒபாமா விவாதித்தார் என்று வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமைதி நடவடிக்கைகளுக்கு அண்டை நாடுகளின் உதவியை தொடர்ந்து நாடும்படி கர்சாயை ஒபாமா கேட்டுக்கொண்டார். ஒபாமா அதிபராக பதவி ஏற்றதில் இருந்து சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனையொட்டி ஈராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையை முழுமையாக வாபஸ் வாங்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்