முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.வின் பொதுச் செயலாளராக விஜயகாந்த் தேர்வு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை,பிப்.22 - சென்னை, வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நேற்று நடந்த தே.மு.தி.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இரண்டு பதவிகளுக்கும் விஜயகாந்த்தே ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதுவரை தலைவர் பொறுப்பை மட்டுமே விஜயகாந்த் வகித்து வந்தது நினைவிருக்கலாம். தற்போது பொதுச் செயலாளர் பொறுப்பையும் அவரே வகிக்கவுள்ளார்.

வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் முதலில் செயற்குழுவும், பின்னர் பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்கள் கேமராக்கள், செல்போன்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்ததால் அனைவரும் அது இல்லாமல் கூட்டத்திற்கு வந்திருந்தனர். முன்னதாக பொதுக்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த விஜயகாந்த்துக்கு தே.மு.க.வினர் வரவேற்பளித்தனர் .  

தே.மு.தி.க. பொதுக்குழுவில்  27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மின் கட்டணத்தை உயர்த்த கூடாது, பால் மற்றும் பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், கூடங்குளத்தில் அமைதி நிலவ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுமட்டுமின்றி தானே புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய அரசு சுமார் ரூ.25 கோடி நிதி ஒதுக்க வேண்டும் எனவும் தே.மு.தி.க. பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago