முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மீனவர்கள் 7 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

நாகை. பிப்.23 - தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் பறிமுதல் செய்வதும் அவர்களது படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவமான அராஜக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் த மிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் சில மீனவர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

சமீபகாலமாக சிங்கள கடற்படையினர் போல சிங்கள மீனவர்களும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பலவித அராஜக செயல்கலை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கள மீனவர்களுக்கு ஆதரவாக சிங்கள கடற்படையினரும் செயல்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு பலமுறை மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காணும்படி மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாகவும், நேரிலும் வலியுறுத்தியும் மத்திய அரசு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணாமல் தமிழக அரசு கோரிக்கை விடுக்கும் போது மட்டும் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவர். பின்னர் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. இனிமேல் தமிழக மீனவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிப்பை வெளியிடுவர். 

இதுபோன்ற சம்பவங்கள்தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறதே தவிர தமிழக மீனவர்கள் உயிருக்கு மத்திய அரசு எந்தவிதமான நிரந்தர பாதுகாப்பையும் அளிக்காமல் அவர்கள் தினந்தோறும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது உயிரை கையில் பிடித்து கொண்டு சென்று  வரும் நிலையில்தான் உள்ளனர்.

சிங்கள கடற்படையினர் மற்றும் மீனவர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் தமிழக மீனவர்கலை இத்தாலியை சேர்ந்த கடற்படையினரும் சுட்டுக்கொன்ற சம்பவம் மேலும் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும், சிங்கள கடற்படையினர் மற்றும் nullமீனவர்களின் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் தமிழக மீனவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களையும், வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டாலும் இதுவரை அவர்களது வாழ்வில் விடிவு ஏற்படவில்லை என்றுதான் கூற முடியும்.

இந்த நிலையில் மீண்டும் நாகை மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் அராஜக செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

நாகை பீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் முட்டப்பன். இவரது மகன் ராஜாராமன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 18ந்தேதி இரவு அதேபகுதியை சேர்ந்த சந்திரபாபு மகன் கோவிந்தராஜ் (47), பக்கிரிசாமி மகன் வடிவேல் (35), ரத்தினவேல் மகன் சக்திவேல் (35), காசிராஜன் மகன் குருநாதன்(25), கந்தசாமி மகன் ராஜசேகரன்(18) மற்றும் சென்னங்குடியை சேர்ந்த வெற்றிவேல் மகன் வையாபுரி(30), மாரிமுத்து மகன் கலைமணி(29) நாகை துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இவர்களது படகை 5 பிளாஸ்டிக் படகுகளில் வந்த 20க்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் சுற்றிவளைத்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை தமிழக மீனவர்கள் வந்த விசைப்படகுகளில் வீசினர். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக மீனவர்கள் சுதாரிப்பதற்குள் சுமார் 15க்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் தங்கள் படகில் இருந்து தமிழக மீனவர்களின் படகில் குதித்து அவர்களை தாங்கள் வைத்திருந்து சுமார் 3 அடி nullநீளமுள்ள வீச்சரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதில் படகில் இருந்த தமிழக மீனவர்களில் வடிவேல் என்பவருக்கு வலது கையில் 3 இடங்களிலும், சக்திவேல் என்பவருக்கு தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களிலும், வையாபுரி என்பவரின் மூக்கு துண்டிக்கப்பட்டும், இதேபோல் மற்றவர்கள் உடலின் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தனர்.

இதையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட படுகாயங்களுடன் கரைக்கு திரும்பிய 7 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து படுகாயமடைந்த மீனவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து நாகை டவுன் போலீசிலும், கடலோர காவல்படையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சிங்கள மீனவர்களால் வெடிகுண்டு வீசப்பட்டு அரிவாளால் நாகை மீனவர்கள் வெட்டப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தாக்கியதால் காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை நேற்று (புதன்) மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அமைச்சருடன் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.சந்திரன், ஒன்றியகுழு உறுப்பினர் தங்க.கதிரவன்,  மீன்வளத்துறை ஆய்வாளர் செளந்தரராஜன், பாலை.செல்வராஜ் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்