முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி அமைச்சர் மத்திய மந்திரியுடன் அவசர சந்திப்பு

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, பிப். 23 - இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக இத்தாலிய துணைவெளியுறவு மந்திரி மிஸ்துரா நேற்று டெல்லி வந்து மத்திய வெளியுறவு விவகாரத்துறை இணை அமைச்சரை அவசரமாக சந்தித்துப் பேசினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை இத்தாலியில் நடத்த வேண்டும் என்று அந்நாடு கோரிவரும் நிலையில் இத்தாலிய அமைச்சரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மீனவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. அவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து சென்றாலும் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக குற்றம் சாட்டி இவர்களை இலங்கை கடற்படை தாக்கி கொன்று வருகிறது. சரி, ராமேஸ்வரம் மீனவர்களுக்குத்தான் எல்லை பற்றி தெரியவில்லை என்பதை ஒருவாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும்கூட, கோடியக்கரை மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ளமுடியும்? நேற்றுகூட நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் தாக்கி அவர்களது வலைகளை அறுத்தெறிந்து மீன்களை கொள்ளையடித்ததோடு, பெட்ரோல் குண்டுகளையும் வீசிவிட்டு போய் இருக்கிறார்கள். இதில் பல மீனவர்கள் காயத்தோடு தப்பிவிட்டார்கள். இந்திய கடலோர காவல்படை என்னதான் செய்கிறது என்று தெரியவுமில்லை, புரியவுமில்லை. மீனவர்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய மட்டும்தான் இந்த படைக்கு தெரியும்போலும். 

இந்த நிலையில் தமிழக மீனவர்கள்தான் தாக்கப்படுகிறார்கள் என்றால் கேரள பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இருவருக்கும் சமீபத்தில் ஒரு துயர நிலை ஏற்பட்டது. கடந்த 15 ம் தேதி கேரள கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 2 மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று தப்புக்கணக்கு போட்டு சுட்டுத்தள்ளி இருக்கிறார்கள் இத்தாலியைச் சேர்ந்த ஒரு சரக்கு கப்பலின் பாதுகாவலர்கள். இச்சம்பவத்தில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி சமீபத்தில் கூறியிருந்தார். 

மீனவர்களை சுட்டுக்கொன்ற இரண்டு இத்தாலிய கடற்படையினரும் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்களை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று துடிக்கிறது இத்தாலி. காரணம் சம்பவம் நடந்த இடம் சர்வதேச கடற்பகுதியாம். அதனால் இந்த வழக்கு விசாரணையையும் இத்தாலியில் தான் நடத்த வேண்டுமாம்.  இப்படிச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறது இத்தாலி. ஆனால் இந்தியா விடுவதாக இல்லை. இந்த விஷயத்தில் சற்று தீவிரமாகவே உள்ளது. இந்தியாவில்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை விசாரணைக்காக இத்தாலியிடம் ஒப்படைக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதுமட்டுமல்ல, விசாரணை பூர்த்தியடையும்வரை இத்தாலி காத்திருக்கத்தான் வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இத்தாலிய துணை வெளியுறவு அமைச்சர் மிஸ்த்ரா டெல்லி வந்து மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பிரினித் கவுரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக இத்தாலியில் இருந்து உயர்மட்ட குழு ஒன்றும் டெல்லி வந்ததோடு, கேரளாவுக்கும் விரைந்துள்ளதாம். எது எப்படி இருந்தாலும் சரி, இந்த விவகாரத்தில் ஒரு கை பார்த்துவிடுவது என்பதில் உறுதியாக உள்ளது கேரள அரசு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago