முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் மனு ஏற்பு: சபாநாயகருக்கு நோட்டீஸ்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.23 -   தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தடை கோரிய வழக்கில் சட்டப்பேரவை தலைவர், செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 10 நாட்களுக்கு தடை விதித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், தனது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தில் 10 நாள் பங்கேற்ற விஜயகாந்த்துக்கு உரிமை மீறல் குழு தடை விதித்துள்ளது என்றும், தடை காரணமாக தொகுதிப் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும், சட்டமன்றத்துக்கு வெளியே சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனது பொறுப்புக்கும் பணிக்கும் எந்தத் தடங்கலும் ஏற்படக்கூடாது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார். 

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவிற்கு மார்ச் 2ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சபாநாயகர் ஜெயக்குமார், சட்டப்பேரவை செயலர் ஆகியேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு வழக்கை அதே தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!