முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.24 - சென்னையில் இரு இடங்களில் நடந்த வங்கிக்கெள்ளையில் தொடர்புடையவர்களுக்கும் ,போலீசாருக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர்.  வேளச்சேரி அருகே இந்த பரபரப்பு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. கொள்ளையர்கள் திருப்பித் தாக்கியதில் இரு போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.புகைப்பட அடையாளம் காட்டப்பட்ட கொள்ளையரும் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்..

சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க சென்னை போலீஸார் 40 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.. சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தெடர்ந்து அப்பகுதியை போலீசார் நள்ளிரவு சுற்றி வளைத்தனர்.

இதை அறித்த கொள்ளையர்கள் தப்பியோட நினைத்தனர். . அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். நள்ளிரவு 1.00 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் நடந்த இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். காயமடைந்த இரு ஆய்வாளர்களை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு சென்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி நேரில் சென்று பார்வையிட்டார். சென்னை வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலின் தலைவனாக செயல்பட்ட வினோத்குமாரின் உருவப் படத்தை பிளக்ஸ் போர்டு மூலம் அனைத்து வங்கிகள் முன்பும் பேனர் போல வைப்பதற்கு காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே அவன் சிக்கி மாண்டு போய் விட்டான். இன்னொரு வங்கியின் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனும், முன்னாள் பொறியியல் மாணவனுமான வினோத்குமார், அந்த வீடியோ பதிவில் இருந்த வினோத்குமாரின் படத்தை பிரிண்ட் போட்ட போலீஸார் நேற்று முன்தினம்தான் பத்திரிக்கையாளர்கள் மூலம் மக்கள் பார்வைக்கு விட்டனர். மேலும், வினோத்குமாரின் படத்தை பிளக்ஸ் போர்டு மற்றும் டிஜிட்டல் பேனர்கள் மூலம் பெரிதாக பிரசுரித்து அதை சென்னையில் உள்ள வங்கிகள் முன்பு வைத்து பொதுமக்களிடமிருந்து தகவலைப் பெறவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக கிட்டத்தட்ட ஆயிரம் டிஜிட்டல் பேனர்களுக்கு ஆர்டரும் கொடுத்திருந்தனராம். மேலும் வங்கிகள் முன்பு வைக்க அனுமதியும் பெறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாகவே வினோத்குமாரும், அவனது கும்பலைச் சேர்ந்தவர்களும் போலீஸாரிடம் சிக்கி கொல்லப்பட்டு விட்டனர். ஒரு வேளை டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட முதல் கொள்ளைக் கூட்டத் தலைவன் என்ற பெயர் வினோத்குமாருக்குக் கிடைத்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago