முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஞ்சல் வழியில் படித்தவரை முதல்வராக்கியது செல்லாது

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.24 - அஞ்சல் விழியில் எம்.எல்.படித்தவரை சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டகல்லூரி முதல்வராக்கியது செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது இது தொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த கணேசன் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரி முதல்வராக பாலாஜி நாயுடு செயல்பட்டு வருகிறார். அவர் எம்.எல். படிப்பை அஞ்சல் வழியில் பல்கலைகழகத்தில் படித்துள்ளார். இதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவும். பார்கவுன்சிலும் அங்கீகாரம் கொடுக்கவில்லை. சட்டப்படிப்பு சம்மந்தபட்ட பாடப்பிரிவு ஆசிரியராக இல்லாமல் சமுகவியல் ஆசிரியராக இருந்த அவர் எப்படி சட்ட கல்லூரி முதல்வராக நீடிக்கமுடியும். இது சட்ட விரோதமானது. இவரது முதல்வர் பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ராமசுப்பிரமணியம் நேற்று விசாரித்து முதல்வர் பாலாஜி நாயுடுவுக்கு பதவி உயர்வு அளித்து முதல்வராக்கியது சட்ட விரோதமானது அது, செல்லாது என தீர்ப்பாளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!