முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 மாவட்ட கலெக்டர்களுடன் அரசு செயலாளர் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,பிப்.24 - தமிழக முதல்வரின் சிறப்பு திட்ட செயல்பாடு குறித்து 7 மாவட்ட கலெக்டர்களுடன் அரசு செயலாளர் நேற்று மதுரையில் ஆலோசனை நடத்தினார்.  முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களை மாவட்டங்களில் செயல்படுத்துவது தொடர்பாக 7 மாவட்ட கலெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் கு.ஞானதேசிகன், சிறப்பு திட்ட அமலாக்க அரசு செயலாளர் சிவதாஸ்மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் டாக்டர் விஜயகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், திண்டுக்கல் கலெக்டர் நாகராஜன், ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார், சிவகங்கை கலெக்டர் ராஜாராமன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் பாலாஜி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன், தேனி கலெக்டர் பழனிச்சாமி, கூடுதல்இயக்குனர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன், ராமமூர்த்தி மற்றும் 7 மாவட்டங்களை சேர்ந்த நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மேலாளர்கள், வங்கியாளர்கள், சமூகநலத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் தனித்துணை ஆட்சியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!