முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் கவுண்டர் நடந்தது எப்படி: கமிஷனர் பேட்டி

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.24 - சென்னை, பெருங்குடி, கீழ்கட்டளை வங்கி கொள்ளையில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் முயற்சி செய்தது. போலீசை நோக்கி கொள்ளையர்கள் சுட்டதால் போலிசார் திருப்பி சுட வேண்டியதாகி விட்டது. என்கவுண்டர் நடந்தது எப்படி என்பது பற்றி நேற்று கமிஷனர் திரிபாதி சென்னையில் பேட்டி அளித்தார். அவரது பேட்டி வருமாறு. வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க இணை தணையர் (தெற்கு) சண்முக ராஜேஷ்வரன் துணை ஆணையர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மற்ற வங்கிகளில் கைப்பற்றப்பட்ட 400 மணி நேர கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையன் உருவ படத்தை சேகரித்தோம். அதை கொள்ளை நடந்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடம் காண்பித்த பொழுது அதில் உள்ளவன் கொள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவன் என்று கூறினர்.

அதை வைத்து கொள்ளையன் படத்தை வெளியிட்டு துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு என்று அறிவித்தோம். பொதுமக்கள் புழங்கும் இடங்களிலும், டி.வி, பத்திரிக்கைகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட படங்களை விநியோகித்தோம்.

இதன் அடிப்படையில் எனக்கு 200 க்கும் மேற்ப்பட்ட தொலைபேசி தகவல்கள் வந்தது. வந்த தகவல்களிலிருந்து பெறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை நெருங்கினோம். அது மிக குறுகலான குடியிருப்பு பகுதி, சத்தம் கேட்டு வெளியே பொதுமக்கள் வெளியே வந்து விட கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்தோம்.

இரவு 1 மணி அளவில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றோம். கதவு பூட்டப்பட்டிருந்தது. வெளியே வரச்சொல்லி எச்சரித்தோம். அப்போது திடீரென்று எங்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். நாங்கள் அப்போது சுடுவதை நிறுத்துங்கள் வெளியே இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தோம் ஆனாலும் அவர்கள் சுடுவதை நிறுத்தவில்லை.

அப்போது எங்களுடைய ஆய்வாளர்கள் ரவி, கிருஷ்டி ஜெயசீலன் ஆகியோர் காயமடைந்தனர் எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் சொந்த பாதுகாப்பு கருதியும் துப்பாக்கி சூடு நடத்தி கதவை உடைத்து உள்ளே சென்றோம். இதில் அறையில் இருந்த 5 பேர்களுக்கும் குண்டடிப்பட்டது. உடனடியாக காயமடைந்த எங்கள் அலுவலர்கள் 2 பேர் வீட்டில் இருந்த 5 பேர் மொத்தம் 7 பேரை எங்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தோம். அங்கு 5 பேர் இறந்து விட்டார்கள் என டாக்டர்கள் கூறியதன் பேரில் அவர்களது உடல் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காயம்பட்ட 2 ஆய்வாளர்களும் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி துணை ஆணையர் சுதாகர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தகவல்களை தவிர மற்ற விசாரணை விபரங்களை மாஜிஸ்ட்ரேட் விசாரணை உள்ளதால் கூற இயலாது.

அறையின் உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே 5 பிஸ்டல் 2 ரிவால்வர் கொஞ்சம் பத்திரிக்கைகள், செல்போன் சில சம்கார்டுகள் இருந்தது. மேலும் ஒரு பேக் ஒன்று இருந்தது. அதனுள் ரூ. 14 லட்சம் பணம் இருந்தது. கொல்லப்பட்டவர்களில் 4 பேர் பீஹாரை சேர்ந்தவர்கள் ஒருவன் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவன். அவர்களை பற்றிய மற்ற விபரங்கள் விசாரணையில் தெரிய வரும். கடந்த டிசம்பர் மாதம் தான் அவர்கள் இங்கு குடிவந்துள்ளனர். இன்று அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு போவதாக இருந்தது. சுடப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் இனிதான் தெரியவரும் பொதுவான விசாரணை நடத்தி வருகிறோம். கொல்லப்பட்டவர்கள் பற்றிய முகவரிகளை மட்டும் சேகரித்துள்ளோம். இனிமேல் தான் அவர்களை பற்றிய தகவலை விசாரிக்க முடியும். இவ்வாறு கமிஷர் திரிபாதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!