முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பிறந்த நாள்: கேக் வெட்டி சிறப்பாக கொண்டாட்டம்

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, பிப்.25 - முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநால் அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல்வரின் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை கட்சியின் அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடஞ்செழியன் வெளியிட்டார். அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 64​ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று காலை (24.2.2012 வெள்ளிக் கிழமை) 10.00 மணி அளவில், தலைமைக் கழகத்தில், ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை,  அமைப்புச் செயலாளர் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் வெளியிட, அதனை மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி. வேணுகோபால்,எம்.பி., பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 64​கிலோ எடையுள்ள கேக்கினை,  அமைப்புச் செயலாளர் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் வெட்டி, தலைமை நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் அங்கு குழுமிருந்த ஏராளமான கழகத் தொண்டர்கள், பொது மக்களுக்கு வழங்கியும், அதேபோல், தென் சென்னை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும், மகளிர் அணியின் சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இனிப்புகளை வழங்கியும் சிறப்பித்தார்கள். 

விழாவில் அ.தி.மு.க அவை தலைவர் மதுசூதனன் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, பா.வளர்மதி, பி.பழனியப்பன், தங்கமணி, சி.வி.சண்முகம், டிகே.சின்னையா, கோகுல இந்திரா, செந்தில் பாலாஜி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், உள்ளிட்ட அமைச்சர்களும், ஈ.வெ.வி.சுலோசனா, சம்பத், பொன்னையன், பி.எச்.பாண்டியன், எம்.பி.க்கள் தம்பி துரை, மைத்தரேயன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் அ.தமிழ் மகன் உசேன், அன்வர் ராஜா, மேயர் சைதை துரைசாமி, துணைமேயர் பென்சமின், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்திரம் டெல்லி சிறப்பு பிரதிநிதி அசோகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் டி.ஆர்.அன்பழகன், துணைசெயலாளர் பி.ஆர்.நம்பிராஜ் (எ) எம்.ஜி.ஆர். பட தயாரிப்பாளர், நடிகர் செந்தில், நம்பி இப்பராஹீம் ராவுத்தர், மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன், வி.செந்தமிழன், வெற்றிவேல், புரசை கிருஷ்ணன், கவுன்சிலர்கள் சின்னய்யா, டி.சிவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்