மதுரையில் இன்று கூடலழகர் திருக்கோயில் தெப்பத்விழா

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, பிப். 25 - மதுரை அருள்மிகு கூடலழகர் திருக்கோவில் மாசிமகம் தெப்பத் திருவிழா இன்று தொடங்கி மார்ச் மாதம் 8 ம் தேதி வரை நடைபெறுகிறது.  இன்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் கன்னியா லக்னத்தில் விஸ்வசேனா புறப்பாடு நடைபெறுகிறது. நாளை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் துவஜாரோசனம் கொடியேற்றம் நடைபெறும். இரவு 7 மணிக்கு மாட வீதிகளில் அன்னவாகனம், ராஜாங்க சேவையும், 27 ம் தேதி காலை 9 மணிக்கு தங்க சிவிகையில் ஏகாந்த சேவையும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் ராஜாங்க சேவையும் நடைபெறுகிறது. 

வரும் 28 ம் தேதி காலை 9 மணிக்கு தங்க சிவிகையில் ஏகாந்த சேவையும், இரவு 7 மணிக்கு அனுமார் வாகனத்தில் மாடவீதிகளில் புறப்பாடும், 29 ம் தேதி காலை 10 மணிக்கு கள்ளர் திருக்கோல பல்லக்கும், மாலை 6 மணிக்கு மோகினி திருக்கோலம் பக்தி உலாவும், இரவு 7 மணிக்கு கெருட வாகனத்தில் ராமசாமி செட்டியார் மண்டகப்படி எழுந்தருளி இரவு நான்கு ஆவணி மூல வீதிகளில் சுற்றி சந்நதிக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெறும். மார்ச் 1 ம் தேதி காலை 9 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு 7 மணிக்கு சேஷ வாகனம் வைகுண்டநாதர் சேவையும், மார்ச் 2 ம் தேதி காலை 10 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் மாட வீதிகளில் சுவாமி புறப்பாடும், இரவு ஆண்டாள் சந்நதியில் பெருமாளும், ஆண்டாளும் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவமும் நடைபெறும். 

மார்ச் 3 ம் தேதி இரவு 7 மணிக்கு எடுப்பு சப்பரத்தில் உபயநாச்சியாருடன் வேணுகோபாலன் திருக்கோலமும், மார்ச் 4 ம் தேதி காலை 9 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு 7 மணிக்கு குதிரை வாகனம் ராஜாங்க சேவையும், மார்ச் 5 ம் தேதி இரவு 7 மணிக்கு உபயநாச்சியாருடன் தங்க சிவிகையும், இரவு கொடியிறக்கமும் நடைபெறும். மார்ச் 6 ம் தேதி மாலை 4 மணிக்கு டவுன்ஹால் சாலையில் உள்ள பெருமாள் தெப்பத்துக்கு புறப்படுதல், இரவு 7 மணிக்கு ஏகாந்த சேவையும், பல்லக்கில் தெப்பம் முட்டுதள்ளுதலும் நடைபெறுகின்றன. மார்ச் 7 ம் தேதி காலை 9 மணிக்கு அலங்கார திருமஞ்சனமும், மாலை 5 மணிக்கு தங்க சிவிகையில் பெருமாள் புறப்பாடும், இரவு 7.45 மணிக்கு உபயநாச்சியாருடன் தெப்பத்துக்குள் சுற்றுதலும், மார்ச் 8 ம் தேதி காலையில் உத்ஸவ சாந்தியும், காலை 8 மணிக்கு மேல் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: