முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுமின் நிலையங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப். 25 - கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு எதிராக சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த தமிழ் அடியான் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் 13 அணு உலைகள் உள்ளன. இதன் மூலம் தலா 250 மெகாவாட் வீதம் மின்சார உற்பத்தியாகிறது. கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் அமைக்கப்படும் அணுமின் நிலையத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். இது சாத்தியம் இல்லாதது. 1986 ம் ஆண்டு ரஷ்யாவில் மிகப் பெரிய அணு உலை விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு 2 ஆண்டுகள் கழித்து கூடங்குளம் அணு உலை அமைக்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து இருக்கிறது. கல்பாக்கத்திலும் புதிதாக 2 அணு உலைகளை அமைத்து வருகிறார்கள். அவை விரைவில் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அணு உலைகளால் அழிவு ஏற்படும் என்று தெரிந்தும் அவை அமைக்கப்படுகின்றன. எனவே அணு உலைகளை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது, தமிழகத்தில் மின் பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் உங்களது மனுவை விசாரிப்பது இந்த பிரச்சினைக்கு எதிராக ஆகி விடும். எனவே இந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago