முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக்பாட்சாவை கடைசியாக சந்தித்த அரசியல் சக்தி யார்?

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 22 - சாதிக்பாட்சா மர்மமான முறையில் இறப்பதற்கு முன்பு கடைசியாக சந்தித்த முக்கிய அரசியல் சக்தி பற்றி சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்துள்ளது. இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. சாதிக்பாட்சா என்ற பெயர் அரசியலில் பலரது வாழ்வை முடித்து வைத்தும் பெயராக இருந்தது என்று வருங்காலம் கூறலாம். முக்கிய பிரமுகர்களின் ஊழல் விவகாரங்களில் முக்கிய பினாமியாக இருந்து தன்னை குறுகிய காலத்தில் வளர்த்துக் கொண்டவர் சாதிக்பாட்சா. அவரது மர்மச் சாவு பலவித சந்தேகங்களை கிளப்பி வரும் வேளையில் இந்த மரணத்தை கூர்மையாக கவனித்து வரும் சி.பி.ஐ. தரப்புக்கு முக்கிய ரகசிய தகவல் ஒன்று கிடைத்ததாக கூறப்படுகிறது. 

முக்கிய அரசியல் சக்தி வாய்ந்த பெண்மணி சாதிக்பாட்சா இறப்பதற்கு சில காலம் முன்பு கடைசியாக சந்தித்து பேசியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முக்கிய இடத்தில் நடந்த அந்த சந்திப்பில் சாதிக்பாட்சா அப்ரூவர் ஆக கூடாது என்று வேண்டுகோள்  வைக்கப்பட்டதாகவும், சாதிக்பாட்சா அதற்கு ஒத்துவரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை சி.பி.ஐ. திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் சிக்கலில் அந்த சக்தி வாய்ந்த பெண்மணி சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony