முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 பேர் குண்டர் சட்டத்தில் கைது கமிஷனர் திருபாதி நடவடிக்கை

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.- 27 - சென்னைநகரில் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்து கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். பள்ளிகரனை. எம்.ஜி.ஆர் நகர். அன்னை இந்திராகாந்தி தெருவை சேர்ந்த சுகுமார் (25) மற்றும் பள்ளிகரணை விவேகானந்தர் தெருவை சேர்ந்த குமார் (27) ஆகியோர்  கடந்த பிப்-5 காலை 09.00 மணிக்கு வேளச்சேசரி மெயின் ரோடு ஆயில்மில் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து கத்தியை காட்டி அவரிடமிருந்து பணம் மற்றும் கைகடிகாரத்தை  கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஜன-27 அன்று பள்ளிகரணை சுண்ணாம்பு கொளத்தூரில் உள்ள நாரயணபுரம் ஏரிகரையில் சுகுமாரின் கள்ளகாதலியான சரளா என்ற பெண்ணை கொலை செய்து ஏரியில் வீசிய வழக்கிலும். கடந்த பிப்-4 அன்று மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தவரிடம் கத்தியை காட்டி பணம் வாட்ச் போன்றவற்றை வழிபறி செய்ததோடு அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கிலும் சம்பந்தபட்டுள்ளார்கள். தொடர்ந்து பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் கொலை. கொள்ளை வழிபறி போன்று பொது மக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்த பள்ளிகரணையை சேர்ந்த சுகு (எ) சுகுமார் மற்றும் குமார் ஆகியோரை காவல் இணை ஆணையாளர் தெற்கு மண்டலம் பரிந்துரையின் பேரில் காவல் ஆணையாளர் திரிபாதி குண்டர் சட்டத்தின் கீழ் உத்தரவிட்டதின் பேரில் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (எ) கோழிக்கால் ராஜேஷ் (27) என்பவர் கடந்த ஜன-9 அன்று காலை 09.30 மணிக்கு என்.ஜி.ஓ. காலனி பஸ் நிலையம் அருகில் நாகராஜன் என்பவரை மடக்கி கத்தியை காட்டி பணத்தை பறித்ததுடன் அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் -13 அன்று 9.30 மணிக்கு பாலகிருஷ்ணபுரம் சந்திரசேகர் கல்யாண மண்டபம் அருகில் வேலு என்பவரை தனது நண்பர்களுடன் வழிமடக்கி உருட்டு கட்டையால் தாக்கி காயபடுத்தி கொலை மிரட்டல் விடுத்த வழக்கிலும்.  இதேபோல் பிப்-24 அன்று 10 மணிக்கு ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோவில் தெருவில் பால் ஆப்ரகாம் என்பவரை வழிமடக்கி உருட்டு கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கிலும். கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆதம்பாக்கம் மஸ்தான் கோவில் தெருவில் பால் இன்பராஜ் என்பவரை வழிமடக்கி உருட்டு கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கிலும் சம்பந்தபட்டுள்ளார். தொடர்ந்து பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் வழிபறி மற்றும் ரவுடித்தனங்களில் ஈடுபட்டு போது மக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (எ) கோழிக்கால் ராஜேஷ் என்பவரை காவல் இணை ஆணையாளர் தெற்கு மண்டலம்  பரிந்துரையின் பேரில் காவல் ஆணையாளர் திரிபாதி குண்டர் சட்டத்தின் கீழ் உத்தரவிட்டதின் பேரில் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் அசோக்நகர். புதூர் 2-வது தெருவை சேர்ந்தவர் தயாளன் (39) கடந்த பிப்-5 அன்று  புதூர் 3-வது அவன்யு மற்றும் 8-வது தெரு சந்திப்பில் போதை தரும் கஞ்சா பொட்டலங்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த போலீசை கண்டதும் தப்பி ஓடியுள்ளார். அவரை விரட்டி பிடித்து கைது செய்து சோதனையிட்டதில் அவரிடமிருந்து மொத்தம் 1100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர் ஏற்கனவே கடந்த பிப்-3  அன்று புதூர் 1-வது தெரு மற்றும் 2-வது தெரு சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்த கொண்டிருந்தபோது சுமார் 1100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அசோக்நகர் மற்றும் புஜதூர் பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களை விற்றதாக இரண்டு வழக்குகளில் சம்பந்தபட்டுள்ளார்.

தொடர்ந்து சமூகத்தை சீரழிக்கும் வண்ணம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மேற்படி தயாளனை. தெற்கு மண்டலம் காவல் இணை ஆணையாளரின் பரிந்துரையின் பேரில் சென்னை நகர காவல் ஆணையாளர். திரிபாதி  குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டதின் பேரில் நேற்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். காவல் ஆணையாளரின் உத்தரவுப்படி தெற்கு மண்டலத்தில் நேற்று முன்தினம் பிப்-5 காலை முதல் விடிய விடிய குற்ற தடுப்பு நடவழக்கைகள் மற்றும் வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்படி தேடுதல் வேட்டையின்போது சந்தேகத்திற்கிடமாக திரிந்த 676 நபர்கள் தடுப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். சிறு சிறு பிரச்சனைகள் செய்த 69 நபர்கள் கைது செய்யப்பட்டு  சென்னை மாநகர காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகன தணிக்கையில் 5117 வாகனகள் சோதனையிடப்பட்டன. 43  வாகனகள் சரியான ஆவணங்கள் இல்லாமைக்காக பறிமுதல் செய்யப்பட்டது.  குடிபோதையில் வாகனம் ஒட்டி வந்த 2 நபர்களின் வாகனகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago