முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூரில் மாட்டுவண்டி பந்தயம் எம்.எல்.ஏக்கள் துவக்கி வைத்தனர்

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

மேலூர், பிப். - 27 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூரில் ரூ. 6.5 லட்சம் பரிசு தொகை கொண்ட மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் மேலூர் ஆர்.சாமி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில்  நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம்,சாமி , தமிழரசன், ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலூரில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தமிழரசன் எம்.எல்.ஏ. கருப்பையா எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மராஜா, உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த பந்தயம் பெரியமாடு, நடுமாடு,  சின்னமாடு ஜோடி, பூஞ்சிட்டு ஜோடி என நான்கு பிரிவுகளாக நடந்தது. பெரியமாடு பிரிவில் 16 ஜோடிகள் கலந்துகொண்டன. இந்த மாட்டிற்கான பந்தய எல்கை மேலூர் சிவகங்கை சாலை மலம்பட்டியிலிருந்து கோட்டநத்தம்பட்டி வரை நடைபெற்றது. இதில் முதல் பரிசை பாண்டிகோவில் பாண்டிச்சாமி மாடு ரூ.ஒருலட்சத்து எட்டை வென்றது. இரண்டாவது பரிசை கல்லணை விஸ்வா ரவிச்சந்திரன் மாடு ரூ.90 ஆயிரம் வென்றது. 3 வது பரிசை கடம்பூர் இளைய ஜமீன்தார் கருணாகர ராஜா மாடு ரூ.80 ஆயிரம் வென்றது. இந்த பந்தயத்தில் கொடி பரிசை கணபதி ரூ.5004பெற்றார். எல்கைப் பரிசை ராமச்சந்திரன்ரூ.5004 ஐ பெற்றார். இரண்டாவதாக நடைபெற்ற நடுமாடு போட்டியில் எல்கை பந்தயத்திடலில் இருந்து ஒத்தப்பட்டி வரை நடைபெற்றது. இதில் 31 ஜோடிகள் கலந்துகொண்டன. முதல் பரிசை மதுரை ஆனையூர் சரவணன் மாடு ரூ,70,002 ஐ வென்றது. இரண்டாவது பரிசை தேனி உப்பார்பட்டியை சேர்ந்த கெளசிக் மகாதேவ் மாடு ரூ.60,003 ஐ வென்றது. 3வது பரிசை மேலூர்எஸ்.வி.பி. முருகன் மாடு ரூ.50,004 ஐ வென்றது. இந்த போட்டியின் கொடிப்பரிசை சசி ரூ.4005 ஐ வென்றார். எல்கைப்பரிசான ரூ.4005ஐயும் அவரே வென்றார். மூன்றாவது போட்டியாக கரிச்சான் பிரிவில் 48  ஜோடிகளும் கலந்து கொண்டன. ஜோடிகள் அதிகமாக உள்ள காரணத்தினால் மாட்டின் உரிமையாளர்களிடம் கூறி இதனை 2 பிரிவுகளாக்கினர். முதல் செட்டில் 24 ஜோடிகள் கலந்துகொண்டன. இந்த போட்டிக்கான எல்கை பந்தயத்திடலிருந்து வண்ணாம்பாறைபட்டி வரை நடைபெற்றது.  இதில் முதலாவதாக கடம்பூர் இளைய ஜமீன்தார் கருணாகர ராஜா ரூ.20,005 ஐ வென்றார். இரண்டாவது பரிசை மதுரை பரவையைச் சேர்ந்த சீலைக்காரி ரூ.15,006 ஐ வென்றார். 3 வது பரிசை மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் ரூ.10,007 ஐ வென்றார். இந்த போட்டிக்கான கொடிப்பரிசை ரூ.1751 ஐ பாக்கியம் பெற்றார். எல்கை பரிசான ரூ.1751 ஐ சக்கரபாணி பெற்றார். இதே ஜோடியின் 2வது செட்டில் முதல் பரிசை மேலூர் எட்டிமங்கலம் ஹரிதாஸ் ரூ.20,005 ஐ வென்றார். இரண்டாவது பரிசை கே.கே.பட்டியை  சேர்ந்த பொன்னையா தேவர் ரூ.15,006ஐ வென்றார். 3 வது பரிசை மதுரைபாண்டி கோவில் பாண்டிச்சாமி ரூ.10,007 ஐ வென்றார். இந்த போட்டிக்கான கொடிப்பரிசை ரூ.1751 ஐ கணபதி பெற்றார். எல்கை பரிசான ரூ.1751 ஐயும் அவரே பெற்றார். நான்காவதாக நடைபெற்ற பூஞ்சிட்டு பிரிவில் 39 ஜோடிகள் கலந்து கொண்டன. இந்த போட்டி பந்தயத்திடலிருந்து கணபதிபுரம் வரை நடைபெற்றது. முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  புதுப்பட்டியைச் சேர்ந்த கே.ஏ.அம்பாள் ரூ.35,001 ஐ வென்றார். இரண்டாவது பரிசாக மேலூர் அதிமுக கவுன்சிலர் ஆர்.கே சந்திரன் ரூ.25,002 ஐ வென்றார். 3வது பரிசை போடி சின்னத்தேவர் நினைவாக பிரபு ரூ.15,003 ஐ வென்றார். இந்த போட்டிக்கான கொடிப்பரிசை கோபி ரூ.3501 ஐ பெற்றார். எல்கைப்பரிசான ரூ.3501 ஐ கணபதி பெற்றார்.  இந்த போட்டியில் இரண்டாவதாக வந்து கொடியை தவற விட்ட காரணத்திநால் வெற்றி வாய்ப்பை இழந்த கூடலூர் விசித்குமாருக்கு ஆறுதல் பரிசாக ரூ.10,000 ஐ போட்டி நடத்துனரான ஆர்.சாமி எம்.எல்.ஏ.  வழங்கினார். இந்த போட்டியை காண்பதற்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், மதுரை மட்டும் மேலூர் சுற்றுப்பகுதிகளிலிருந்து சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாலை இருமருங்கிலும் பந்தயத்திடலில் இருந்து எல்கை வரை மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது.  இந்த பந்தயத்தை காண்பதற்காக வந்த ரசிகர்கள் கூறியதாவது. ஆண்டுதோறும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் சட்டமன்ற தொகுதி ஆர்.சாமி எம்.எல்.ஏ பல லட்சம் மதிப்பிலான இந்த மாட்டுவண்டி பந்தயத்தை வெகு சீரும் சிறப்புமாக நடத்திக் கொண்டு வருகிறார் என்று தெரிவித்தனர்.  
இந்நிகழ்ச்சிக்கு மேலூர் யூனியன் செல்வராஜ்,  சேர்மன்கள் மேலூர் சரவணன், கொட்டாம்பட்டி வெற்றி செழியன், வள்ளாளபட்டி உமாபதி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஜபார், மேலூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், அம்மா பேரவை நகர் செயலாளர் சாகுல் ஹமீது , கொட்டாம் பட்டி  துனை சேர்மன் குலோத்துங்கன், சென்னகரம்பட்டி எஸ்.எஸ். துரை, சூரக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் துரைஅண்ணா, ஏ.வலையபட்டி தலைவர் பெரியபுல்லான் என்ற செல்வம் மற்றும் மேலூர் நகராட்சி, ஊராட்சி, கொட்டாம்பட்டி ஊராட்சி, அ.வள்ளாலபட்டி பேரூராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள்   உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இந்த போட்டிக்கான பரிசுத் தொகைகளை காஞ்சிவனம் சுவாமி திடலில் மாட்டின் உரிமையாளர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வழங்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்