முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலைகளில் பயணம் செய்யும்போது அதிமுக.வினர் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும்

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை,பிப்.- 28 - அகால மரணமடைந்த அ.தி.மு.க வினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க தலைமையகத்தின் சார்பில் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். மேலும் அ.தி.மு.கவினர் சாலையில் பயணம்செய்யும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் காலனி கிளைக்கழக மேலமைப்புப் பிரதிநிதி  சி. மனோகரன்,  சேட்டு மற்றும் முனியம்மாள்ஆகியோர் வாலாஜாபாத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வாகனம் மூலம் வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில், மனோகரன், முனியம்மாள் ஆகியோர் அகால மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும்,  சேட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த மனத் துயரம் அடைந்தேன். கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று மீண்டும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சாலை விபத்தில் மரணமடைந்த  மனோகரன், முனியம்மாள் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், இவர்களது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதே போல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேட்டு விரைவில் nullரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன், இவரது மருத்துவ சிகிச்சைக்காக கழகத்தின் சார்பில் 6,000/​ ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago