முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலின் மொத்த உருவம் மாயாவதி அரசு -சோனியாகாந்தி

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ, பிப்.- 28 - உத்தரபிரதேசத்தில் முதல்வர் மாயாவதி தலைமையிலான ஆளும் பகுஜன் சமாஜ் அரசு ஊழலின் மொத்த உருவமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கிப்பேசியுள்ளார். த்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று 6 வது கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. எஞ்சியுள்ள 7 கட்டத் தேர்தல் வருகிற மார்ச் 3 ம் தேதி நடைபெற உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சகராம்பூர் என்ற நகரில் உள்ள காந்தி மைதானத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு, உத்தரபிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கும் நிதி மாயாவதியின் மூக்குக்குப் பின்னால் காணாமல் போய்விட்டது என்றார். அந்த அளவுக்கு அவரது அரசு ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை உத்தரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக கொடுத்தது. ஆனால் அந்த பணம் மாயாவதி அரசின் ஊழலில் காற்றில் பறந்து காணாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட இந்த அரசு ஏழைகளின் உணவைக்கூட பறித்துக்கொண்டது. ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காகத்தான் மத்திய அரசு பணம் கொடுக்கிறது. ஆனால் அந்தப் பணத்தையே மாயாவதி அரசு சுருட்டிக்கொண்டு ஏழைகளுக்கு உணவு தராமல் செய்துவிடுகிறது என்றும் சோனியா கூறினார். சிறுபான்மை சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவால் சில எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கிலி பிடித்துள்ளது. உ.பி. மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு முற்றிலுமாக நிறைவேற்றப்படும் என்றும் சோனியா உறுதி கூறினார். நாட்டு மக்களுக்கு தொண்டு செய்வதற்கு அரசியல் என்பது ஒரு கருவி. ஆனால் கடந்த 22 ஆண்டுகளாக உத்தரபிரதேச மக்களை தவறானவர்கள் ஆட்சி செய்து, அவர்களை கஷ்டத்தில் தள்ளி இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் மக்களுக்கு நன்மைகளை செய்து வருகிறது என்றும், எனவே உ.பி.யிலும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த உ.பி. வாக்காளர்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்