முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டரின் வங்கிகணக்கு முடக்கம்

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பிப். - 28 - அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் இருப்பிடத்தை அமெரிக்காவுக்கு தெரிவித்த பாகிஸ்தானிய டாக்டர் ஷகீல் அப்ரிதி மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்குகளை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.  அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது அமெரிக்காவுக்கு தெரியும். ஆனால் பாகிஸ்தானோ பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லவே இல்லை என்று சாதித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. பாகிஸ்தானிய டாக்டர் ஷகீல் அப்ரிதியின் உதவியுடன் பின்லேடனின் மறைவிடத்தை கண்டுபிடித்தது. அமெரிக்காவின் ஆலோசனைப்படி போலியான போலியோ விழிப்புணர்வு பிரச்சாரத்தை பின்லேடன் பதுங்கியிருந்த அபோதாபாத்தில் டாக்டர் மேற்கொண்டார். அப்போது பின்லேடன் வீட்டை கண்டுபிடித்து உறுதி செய்து அமெரிக்காவுக்கு தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்க படைகள் ஒசாமாவை சுட்டுக் கொன்றன. ஒசாமா கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் இருந்து வெளியேற முயன்ற ஷகீலை அந்நாட்டு ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. டாக்டர் ஷகீல் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் வங்கியில் ஏராளமான பணம் போட்டு வைத்திருந்தார். அதை பாகிஸ்தான் அரசின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் முடக்கினர். தாங்கள் ஒசாமா இங்கு இல்லை என்று சொல்லியும், ஷகீல் காட்டி கொடுத்ததால் பாகிஸ்தான் பொய் சொன்னது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த கோபத்தில்தான் ஷகீல் மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்