முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசிய விவகாரம்: காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.- 28 - நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசிய விவகாரம் தொடர்பாக, 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர்நீnullதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த நீnullதிபதியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில், இது குறித்து விசாரிக்க கோரி சென்னை உயர்nullநீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த வழக்குறைஞர் சுந்தரராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீnullதிமன்ற nullநீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும் என்.பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் குறித்து குற்றப் பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் சுதாகர் அல்லது அதே அந்தஸ்துள்ள அதிகாரி ஒருவரை நியமித்து விசாரணை நடத்துமாறு காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களுக்குள் தாக்கல் செய்யுமாறும் nullநீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். மேலும் சங்கரராமன் கொலை வழக்கை புதுவை செஷன்ஸ் nullநீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கை nullநீதிபதி ராமசாமி விசாரித்து வந்த நிலையில் தான்,கேசட் விவகாரத்தில் உயர் நீnullதிமன்றத்தில் நீnullதிபதி சுகுணா, சங்கரராமன் கொலை வழக்கிற்குத் தடை விதித்தார். இப்போது இந்த வழக்கை விசாரித்த உயர்nullநீதிமன்ற nullநீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும் என்.பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தடையை nullநீக்கியதோடு,இந்த வழக்கு எந்த இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டதோ அந்த இடத்திலிருந்து புதிதாக நியமிக்கப்பட உள்ள  nullநீதிபதி வழக்கு விசாரணையைத்தொடரவும் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்