முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை - டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்கள்

செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், மார்ச் 22 - கட்சிமாறி ஓட்டுப் போட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி( டி.ஆர்.எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் எந்தத் தவறும் செய்யாத தங்களை தண்டிப்பது நியாயமில்லை என்றும் கூறியுள்ளனர். 

டி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த கே.வித்யாசாகர்ராவ், இ.ரவீந்தர்ரெட்டி, கே.சம்மையா ஆகியோர் கட்சி மாறி ஓட்டுப் போட்டதாக கூறி அவர்களை டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் கே.சந்திரசேகரராவ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தாங்கள் அப்பாவிகள் என்றும், தாங்கள் டி.ஆர்.எஸ். கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மொகமது மகமூத் அலிக்குத்தான் தாங்கள் ஓட்டுப்போட்டதாகவும் தாங்கள் கட்சிமாறி ஓட்டுப்போடவில்லை என்றும் தெரிவித்தனர். எந்தத் தவறும் செய்யாத தங்களை தண்டித்தது நியாயமில்லை என்றும் தங்களது சஸ்பெண்ட் உத்தரவை கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கட்சியின் மேலிடத் தலைவர்களுக்கு சிலர் தவறான தகவல்களை கொடுத்துவிட்டனர் என்றும், தாங்கள் ஏற்கனவே சந்திரசேகரராவிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர். தவறுசெய்யாத தங்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தாங்கள் இந்த ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தாங்கள் கட்சியை விட்டு விலகப்போவதில்லை என்றும் கட்சியில் தொடர்ந்து இருக்கப்போவதாகவும், தங்களது பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை கட்சி மேலிடத்தை வலியுறுத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எம்.எல்.ஏ. பதவி எங்களுக்கு முக்கியமில்லை. எங்களது லட்சியமெல்லாம் தனி தெலுங்கானா மாநிலத்தை அடைவதே என்றும் தெலுங்கானா பிராந்திய மக்களுக்காக பாடுபடுவதே தங்களது குறிக்கோள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago