முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த நகரத்திலிருந்தும் பணம் அனுப்ப ஏர்டெல் மணி வசதி

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,பிப்.- 28 -  எந்த நகரத்திலிருந்தும் பணம் அனுப்ப  இனி ஏர்டெல் மணி வசதியை பயன்படுத்தலாம். பணப்பரிவர்த்தனை யுடிலிட்டி பில்களுக்கு பேமெண்ட் செலுத்துதல் மற்றும் திரைப்படங்களுக்கு டிக்கெட் வாங்குதல் -இவைகள் அனைத்தும் மற்றும் இன்னும் பல்வேறு  வசதிகளும் தற்பொழுது எளிமையான வழியில் சாத்தியமாகும். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முழுமையான சொந்தமாக்கப்பட்ட ஏர்டெல் வாலெட் எம் காமர்ஸ் சர்வீசஸ் நிறுவனம்,  மொபைல் ஆபரேட்டர்களின் முதலாவது மெபைல் வாலெட் சேவையான ஏர்டெல் மணி என்னும் இந்த வகையில் நாட்டின் முதலாவது சேவையான ஏர்டெல் மணியின் பான் இந்தியா அடிப்படையிலான அறிமுகத்தினை இன்று அறிவித்துள்ளது. இந்தியாவின் 300 -க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் தற்பொழுது கிடைக்கப்பெறும் இந்த ஏர்டெல் மணி வசதியானது. ஒரு எளிமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான சேவையாகும். இது பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் பணத்தினை லோடு செய்து, 7000 -ற்கும் மேற்பட்ட வர்த்தக அமைவிடங்களில் ஷாப்பிங் செய்யவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் மற்றும் யுடிலிட்டி பில்கள் மற்றும் ரீசார்ஜ் ஆகியவைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது. ரொக்கம்/ கார்டு பேமெண்ட் தேர்வுகளுக்கு மாற்றான தேர்வாகத்திகழ்வதுடன்,  ஏர்டெல் மணி ப்ரீபெய்டு வாலெட்கள் மற்றும் வங்கி கணக்குகளுக்கும் உடனடியாக பணம் அனுப்பும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முதலாவது மொபைல் அடிப்படையிலான சேவையாகவும் திகழ்கிறது. இதன் வழியாக, தமிழ்நாட்டிலுள்ள வாடிக்கையாளர்கள் இனி ஏர்டெல் மணியை பயன்படுத்தி நாடு முழுவதும் எந்த நேரத்திலும், இடத்திலும் பேமெண்ட்களை மேற்கொள்ளலாம் மற்றும் பணத்தினை டிரான்ஸ்பர் செய்யலாம்.
ஏர்டெல் மணியின் தேசிய அளவிலான கிடைக்கப்பெறுதல் டெல்லி என்.சி.ஆர். மற்றும் சென்னையில் 2011 -ம் ஆண்டு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த. பாரதி ஏர்டெல் நிறுவனத்தினர் கேரளா தமிழ்நாட்டிற்கான தலைமை செயல் அலுவலர் விகாஸ் சிங் கூறுகையில், மளிகை சாமான்கள் வாங்குதல், அல்லது நண்பர்களுடன் உணவருந்துதல் போன்றவைகளுக்கு இந்திய மக்களில் 90 சதவீகிதத்தினர் பணம் செலுத்தும் முறைகளையே பின்பற்றுகின்றனர். மாறிவரும்   சூழலில், இப்போக்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு மாறியது. எனினும் பணம் அனுப்புதல் என்பது மணியார்டர்கள் மற்றும் காசோலைகள் போன்ற முறைகளையே இன்னும் சார்ந்துள்ளது. வெறும் ஒரு பட்டனை அழுத்துவதன் வழியாக வாடிக்கையாளர்களுக்கு பணத்தினை பரிவர்த்தனை செய்தல் மற்றும் அனுப்புதல் தேவைப்பாடுகளை ஈடேற்ற சந்தையில் மிகவும் தேவைப்படும் மொபைல் அடிப்படையிலான வாலெட் சேவையை, ஏர்டெல் மணிவசதியின் தேசிய அளவிலான அறிமுகம் ஈடேற்றும், தமிழ்நாட்டிலுள்ள உங்கள் வாடிக்கையாளர்கள் பணம் மற்றும் கார்டுகள் அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு எளிய மாற்றாகத் திகழும் ஏர்டெல் மணி வசதியை வரவேற்ப்பர் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையை கொண்டுள்ளோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்