முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பிப்.- 29 - மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோதப்போக்கை கண்டித்து நேற்று நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்திற்கு ஓரளவே ஆதரவு இருந்தது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோக திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். வேலைக்கான பாதுகாப்பு, முறைசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு தேசிய நிதியம் ஏற்படுத்த வேண்டும். தொழிளாலர் நலச்சட்டங்களை சீரிய முறையில் அமுல்படுத்த வேண்டும். பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது. மாதம் ரூ.10 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியமாக அறிவிக்க வேண்டும். எல்லோருக்கும் ஓய்வூதியமும் சம ஊதியமும் கிடைக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும் தொழிற்ங்கம் அமைக்கும் உரிமையும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பொதுவேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு.எ. ஐ.யு.டி.யு.சி., ஏ. ஐ.டி.சி.யு.,டி.யு.சி.சி.யு.டி.யு.சி., எல்.பி.எப்., எஸ்.இ., டபுள்யு.ஏ., ஆகிய தொழிற்சங்கங்களும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர் சம்மேளனங்களும் இந்த பொதுவேலைநிறுதத்தில் கலந்துகொண்டன. ஆனால் இந்த போராட்டத்திற்கு ஓரளவே ஆதரவு இருந்தது. மேற்குவங்காளத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்திருந்தார். இதனால் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருந்தன. அதேசமயத்தில் சாலைகளில் அதிக அளவு மோட்டார் போக்குவரத்து நடைபெறவில்லை. நாட்டின் வர்த்தக நகரான மும்பையில் ஓரளவே ஆதரவு இருந்தபோதிலும் நதி பரிமாற்றம் கணிசமான அளவுக்கு பாதித்தது. வங்கி, இன்ஸ்சூரன்ஸ் துறையைத்தவிர மற்றபடி மாமூல் வாழ்க்கை எதுவும் பாதிக்கவில்லை. அத்தியாவசிய சேவைகளான போக்குவரத்து உள்பட அனைத்து சேவைகளும் நடைபெற்றன. தலைநகர் டெல்லியில் மாமூல் வாழ்க்கை சிறிதளவு பாதித்தது. ஸ்டிரைக்கிற்கு ஆதரவாக ஆட்டோக்களும் டாக்சிகளும் ஓடவில்லை. போக்குவரத்து பஸ்கள் குறைவாக இருந்ததால் பயணிகள் அதிக நேரம் ஸ்டாப்புகளில் நிற்கவேண்டியதாயிற்று. கேரளாவில் மாமூல் வாழ்க்கை அடியோடு பாதித்து. மோட்டார் வாகனங்கள் குறிப்பாக பஸ்கள், லாரிகள் எதுவும் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்