முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை லிட்டருக்கு மீண்டும் ரூ.4 உயருகிறது

புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பிப். - 29 - அடுத்த வாரம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 வரை மீண்டும் உயர்த்தப்படவுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல் விலை உயருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 109 டாலராக உயர்ந்தது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.  இப்போது கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 125 டாலராக உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்த்தப்படவுள்ளது. இந்த விலை உயர்வு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விலை மட்டுமின்றி டீசல் விலையும் உயருகிறது. பெட்ரோல் விலை உயர்த்தப்படும் அதே சமயத்தில் டீசல் விலையையும் உயர்த்துவது குறித்த அதிகாரம் அமைச்சர் குழுவுக்கு அளிக்கப்படும் என்று டெல்லியில் அதிகாரங்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்