முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு மத்திய அரசு கடிதம்

புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பிப். - 29 - போபால் விஷ வாயுவுக்கு காரணமாக இருந்த டவ் நிறுவனத்தின் விளம்பரங்களை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.  உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2008 ல் சீன தலைநகரம் பெய்ஜிங்கில் நடந்தது. இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி லண்டனில் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு டவ் கெமிக்கல் நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. போபால் விஷ வாயுவுக்கு காரணமாக இது இருந்தது. இதனால் ஒலிம்பிக் ஸ்பான்சரில் இருந்து டவ் நிறுவனத்தை நீக்க வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலை பலமுறை வலியுறுத்தியது.
ஆனால் இதுவரை டவ் நிறுவனம் ஸ்பான்சரில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தற்போது தலையிட்டுள்ளது. டவ் ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒலிம்பிக் கவுன்சிலுக்கு கடிதம் எழுதி உள்ளது. இது குறித்து விளையாட்டு அமைச்சக இணை செயலாளர் ராகுல் பட்னாகர் கூறியதாவது,  கோடிக்கணக்கான இந்திய மக்களின் உணர்வை வெளிப்படுத்தி சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு வலுவான தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் உயர்ந்த கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 2 ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் டவ் விவகாரம் குறித்து முடிவு செய்யப்படும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்