முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோபல் பரிசுக்கு கிளிண்டன் பெயர் சிபாரிசு

புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

ஆஸ்லோ, பிப். - 29 - இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.  உலகில் பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கான நோபல் பரிசுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அதற்காக 231 பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனும் ஒருவர்.  இவர் தவிர, ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஹெல்மெட்ஹோல், உக்ரைன் முன்னாள் அதிபர் யூலியாடிமோ, அமெரிக்க ராணுவ வீரர் பிரட்ளிமேனிங் ஆகியோர் அடங்குவர். ஹெல்மெட்ஹோல் ஜெர்மனி ஒருங்கிணைப்புக்கு பாடுபட்டவர். பிரட்ளிமேனிங் தற்போது அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் இருந்து விக்கிலீக் இணையதளத்திற்கு ஆவணங்களை திருடி வழங்கிய குற்றச்சாட்டிற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சிபாரிசு செய்யப்பட்டவர்களில் 188 பேர் தனி நபர்கள். 43 பேர் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவருக்கு உலக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கான நோபல் பரிசு வருகிற அக்டோபர் மாதம் வழங்கப்படுகிறது. இந்த தகவலை நோபல் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 241 பேர் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்