முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கைஅணியை வீழ்த்தியது

புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஹோபர்ட், மார்ச். - 1 - முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் ஹோபர்ட் நகரில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  இலங்கைக்கு எதிரான இந்த கடைசி லீக்கில் இந்திய அணி போனஸ் புள்ளி களுடன்  வெற்றி பெற்று உள்ளது. எனவே இந்திய அணிக்கு இந்தத் தொடரில் இன்னும் இறுதிக் கட்ட வாய்ப்பு உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெ ற்று அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது.  இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனானவிராட் கோக்லி அபாரமாக பேட்டிங் செய்து சதம் அடித்து அணியை வெற்றி ப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கா ம்பீர், டெண்டுல்கர், சேவாக் மற்றும் ரெய்னா ஆகியோர் அவருக்குப் பக்கபல மாக ஆடினர்.  பேட்டிங்கிற்கு ஏதுவான இந்த மைதா  னத்தில் பந்து வீச்சு எடுபடவில்லை. இதனால் இரு அணி வீரர்களும் பந்து வீச்சில் திணறினர்.  இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக் கு இடையேயான கடைசி லீக் போட்டி ஹோபர்ட் நகரில் உள்ள பெல்லே ரிவல் ஓவல் மைதானத்தில் நேற்று பக லிரவு ஆட்டமாக நடந்தது. இதில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி தரப்பில், ஜெயவ ர்த்தனே மற்றும் தில்ஷான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.  இலங்கை வீரர்கள் இந்தப் போட்டியில் வெளுத்துக் கட்டினர். இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 320 ரன்னை எடுத்  தது. தில்ஷான் மற்றும் சங்கக்கரா சதம் அடி த்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். தில்ஷான் 165 பந்தில் 160 ரன்னை எடுத் து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். சங்கக்கரா 87 பந்தில் 105 ரன்னை எடுத் தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக் சர் அடக்கம். தவிர, ஜெயவர்த்தனே 22 ரன்னையும், மேத்யூஸ் 14 ரன்னையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில், ஜாஹிர்கான் 61 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். பிரவீன் குமார் 64 ரன்னைக் கொ டுத்து 1 விக்கெட் எடுத்தார். ஆல்ரவுண்டர் ஜடேஜா 43 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்திய அணி 321 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சவாலான இல க்கை இலங்கை அணி வைத்தது. அடுத் து களம் இறங்கிய இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 321 ரன் னை எடுத்தது. 

இதனால் இந்திய அணி இந்த கடைசி லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாச த்தில் வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 5 புள்ளியும், போனஸ் புள்ளியும் கிடைத் தது. 

இந்திய அணி தரப்பில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கோக்லி அதிரடியாக ஆடி, 86 பந்தில் 133 ரன்னை எடுத்தார். இதில் 16 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். 

காம்பீர் 64 பந்தில் 63 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். தவிர, ரெ ய்னா 24 பந்தில் 40 ரன்னையும், டெண்டுல்கர் 30 பந்தில் 39 ரன்னையும், சே வாக் 16 பந்தில் 30 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், மலிங்கா 96 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். மகரூப் 21 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியி ன் ஆட்டநாயகனாக கோக்லி தேர்வு செய்யப்பட்டார். 

-----------------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்