முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கரை வீழ்த்தியதே மிகப் பெரிய சாதனை - ரவி ராம்பால்

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 23 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடந்த கடை சி லீக் ஆட்டத்தில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தியதே எனது சாதனை என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி வேகப் பந்து வீச்சாளரான ரவிராம்பால் தெரிவித்தார். 

சென்னையில் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெண்டுல்கர் 2 ரன்கள் எடுத்த நிலையி ல் மே.இ.தீவு வீரர் ராம்பால் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். 

அவரை வீழ்த்திய ராம்பால் டெண்டுல்கரை வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனை என்று கூறி இருக்கிறார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது - 

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பெரிய சாதனை எதையும் நிக ழ்த்தியதாக கருதவில்லை. ஆனால் டெண்டுல்கரை வீழ்த்தியது எனது மாபெரும் சாதனை ஆகும். 

அவரை வீழ்த்தியதன் மூலம் எனது வாழ்நாள் கனவு நிறைவேறி விட்டதாக கருதுகிறேன். டெண்டுல்கர் உலகில் சிறந்த பேட்ஸ்மேன் . எனது பந்தில் அவர் அவுட் ஆகி வெளியேறியதைப் பார்த்த போது, எனக்கு ஏற்பட்ட உணர்ச்சியை எப்படி சொல்வது என்றே தெரியவில் லை. உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 20 -ம்தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் 42 -வது லீக் போட்டி நடந்த து. இது கடைசி லீக் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

பகலிரவாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கு இந்திய த் தீவுகள் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 268 ரன்னை எடுத்தது. 

இந்திய அணி தரப்பில் அதிரடி வீரர் யுவராஜ் சிங் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். தவிர, அவருக்குப் பக்கபலமாக ஆடிய, விராட் கோக்லி அரை சதம் அடித்தார். இதனால் இந்திய அணி கெள ரவமான ஸ்கோரை எட்டியது. 

269 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் அடுத்து மே.இ.தீவு அணி களம் இறங்கியது. ஆனால் அந்த அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 43 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 188 ரன்னில் சுருண்டது. 

இதனால் இந்திய அணி இந்த கடைசி லீக்கில் 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2 -வது இடத்தைப் பிடி த்து காலிறுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்