முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான 2-வது போட்டி தென்ஆப்பிரிக்கா அபாரவெற்றி

புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

நேப்பியர், மார்ச். - 1 - நியூசிலாந்து அணிக்கு எதிராக நேப்பி யர் நகரில் நடைபெற்ற 2 -வது ஒரு நா ள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்  பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றி பெற்று இந்தத் தொடரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக் கா அணி தரப்பில், துவக்க வீரர்  அம் லா அபாரமாக பேட்டிங் செய்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பக்கபலமாக, டு பிளீசஸ், டுமினி, டிவில்லியர்ஸ் ஆகி யோர் ஆடினர்.  முன்னதாக பெளலிங்கின் போது, எம், மார்கெல் சிறப்பாக பந்து வீசி 5 முக்கி ய விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூசி லாந்து அணியை சிதற வைத்தார். அவ ருக்கு ஆதரவாக, சாட்சோபே, ஸ்டெ யின், மற்றும் காலிஸ் ஆகியோர் பந்து வீசினர்.  டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்று ப் பயணம் மேற்கொண்டு கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் தலைமையி லான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.  நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக் கா அணிகளுக்கு இடையே 3 போட்டி கள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது.  இதன் 2 -வது போட்டி நேப்பியர் நகரி ல் உள்ள மெக்லீன் பார்க்கில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் டாசில் வெற்றி பெற்ற தெ.ஆ. அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.  நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 230 ரன்னை எடுத்தது.  நியூசிலாந்து அணி சார்பில், கேப்டன் மெக்குல்லம் பொறுப்புடன் ஆடி 96 பந்தில் 85 ரன்னை எடுத்தார். இதில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் சாட்சோபே வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்தபடியாக, குப்டில் 73 பந்தில் 58 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். தவிர, செளதீ 28 ரன்னையும், எல்லிஸ் 19 ரன்னையும், வில்லியம்சன் 13 ரன்னையும் எடுத்தனர். 

தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில், முன் னணி வேகப் பந்து வீச்சாளரான  மார் கெல் 38 ரன்னைக் கொடுத்து 5 விக்கெ ட் கைப்பற்றினார். சாட்சோபே 3 விக் கெட்டையும், ஸ்டெயின் மற்றும் கா லிஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். தெ.ஆ. அணி 231 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை நியூசி லாந்து அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 38.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்னை எடுத் தது. இதனால் தெ. ஆ. அணி இந்த 2 -வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தி ல் அபார வெற்றி பெற்றது. இதன் மூல ம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற் றியுள்ளது. தெ. ஆ. அணி சார்பில், துவக்க வீரராக இறங்கிய அம்லா அதிரடியாக ஆடி, 107 பந்தில் 92 ரன்னை எடுத்தார். இதில் 12 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவ ர் நெதுல்லா வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். தவிர, டுமினி 39 பந்தில் 43 ரன்னை எடு த்தார். டு பிளீசஸ் 25 பந்தில் 34 ரன்னையும், டிவில்லியர்ஸ் 35 பந்தில் 31 ரன் னையும், ஆன்டாங் 17 ரன்னையும் எடு த்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், நெதுல் லா 60 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மில்ஸ் மற்றும் எல்லி ஸ் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக மார்கெல் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்