முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாட் இன மக்கள் போராட்டம் - ரயில் சேவைகள் பாதிப்பு

புதன்கிழமை, 23 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஜெய்ப்பூர், மார்ச் 23 - ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு கேட்டு ஜாட் இன மக்கள் நடத்திவரும் ரயில் மறியல் போராட்டத்தால் வடமேற்கு ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வே மண்டலங்களில் 95 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு 27 சதவீத ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த ஜாட் இன மக்கள் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின் காரணமாக 50 ரயில்களின் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 45 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வடமேற்கு மற்றும் வடக்கு ரயில்வே மண்டலங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போகவேண்டிய இடத்திற்கு போக முடியாமல் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அரியானா, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரயில் பயணிகள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தங்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்று ஜாட் இன மக்களின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஜாட் இன மக்களுடன் பேச்சுநடத்த ராஜஸ்தான் அரசு மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்