முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் விலை உயராது-ஜெய்பால் ரெட்டி

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மார்ச் - 2 - தற்போது நடந்துகொண்டிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரப்போவதாக செய்திகள் வெளியாயின. ஆனால் இத்தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்த யூகங்கள் சரியானவை அல்ல என்று மத்திய பெட்ரோலிய, இயற்கைய எரிவாயுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி டெல்லியில் நேற்று தெரிவித்தார். மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்களிடம், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ரெட்டி, இந்த நேரத்தில் நாங்கள் அப்படி சிந்திக்கவேயில்லை என்று மறுத்தார். பெட்ரோல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். கடந்த டிசம்பர் 1 ம் தேதிதான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 65.64 க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 41 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படி இருந்தும் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது என்று வழக்கமான பல்லவியை பாடுகின்றன. எண்ணைக் கம்பெனிகள். இந்த நாட்டையே எழுதிக் கொடுத்தாலும் எண்ணைக் கம்பெனிகளுக்கு ஆசை தீராது போலும். இவர்களுக்கு மத்திய அரசும் வக்காலத்து வாங்குவதுதான் வேதனையிலும் வேதனை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago