முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொரார்ஜி பிறந்த தினம் தலைவர்கள் மரியாதை

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். - 2 - மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் 116 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், மக்களவை தலைவர் மீராகுமார், துணை தலைவர் கரியமுண்டா, பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி, மக்களவை செயலாளர் விஸ்வநாதன், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். மொரார்ஜி தேசாயின் படத்துக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகமும் வெளியிடப்பட்டது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மொரார்ஜி தேசாய், 1977 மார்ச் முதல் 1979 ஜூலை வரை பிரதமராக இருந்தார். இந்தியாவின் 4 வது பிரதமரான அவருக்கு காங்கிரஸ் கட்சியை சேராத முதல் பிரதமர் என்ற பெருமையும் உண்டு. பாகிஸ்தானுடன் அமைதி முயற்சியை மேற்கொண்டதால் பாகிஸ்தானின் மிக உயரிய நிஷான் இ பாகிஸ்தான் விருதை அந்நாடு அவருக்கு வழங்கி கவுரவித்தது. இந்த விருதை பெற்ற ஒரே இந்திய அரசியல்வாதி தேசாய்தான். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அவரது புகைப்படம் 1995 ல் ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவால் திறந்து வைக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்