முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி அகழ்வாய்வு அறிக்கையை வெளியிடவேண்டும்: மத்தியதகவல் ஆணையம்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச். - 2 - அயோத்தியில் பாபர் மசூதி, ராமஜென்மபூமி அமைந்திருக்கும் இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு பற்றிய ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்புக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  எனினும் இந்த அறிக்கையை வெளியிட ஐகோர்ட்டின் தடை இருக்கும் பட்சத்தில் அந்த உத்தரவின் நகலை மனுதாரரான சுபாஷ் அகர்வாலுக்கு அளிக்க வேண்டும் என்று தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த மிஸ்ரா கூறியுள்ளார். அலகாபாத் நீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் நகலை கோரி தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஏ.எஸ்.ஐ.க்கு சுபாஷ் அகர்வால் விண்ணப்பத்திருந்தார். ஆனால் இது ஐகோர்ட்டின் பரிசீலனைக்கு மட்டுமான அறிக்கை என்று கூறி அதை அளிப்பதற்கு ஏ.எஸ்.ஐ. மறுத்து விட்டது. இந்த விவகாரம் தகவல் ஆணையத்திற்கு வந்த போது அறிக்கையை வெளியிடுவதற்கு ஐகோர்ட் தடை விதித்திருந்தால் அந்த உத்தரவின் நகலை தமக்கு வழங்க வேண்டும் என்று அகர்வால் வாதிட்டார். இதையடுத்து மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்