முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் கடைசி லீக்கில் இன்றுமோதல்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், மார்ச். - 2 - முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் மெல்போர்னில் இன்று நடக்க இருக்கும் கடைசி லீக் ஆட்டத் தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோத இருக்கின்றன.  இந்தப் போட்டி இந்திய அணிக்கு வா ழ்வா? சாவா? என்ற நிலையை ஏற்ப டுத்தியுள்ள போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடைசி லீக் போட்டியில் ஆஸ்தி ரேலிய அணி வெற்றி பெறும் பட்சத்தி ல் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந் தால் இலங்கை மற்றும் இந்திய அணிக ளின் ரன் ரேட் கணக்கிடப்பட்டு இறுதி ச் போட்டிக்கு செல்லும் அணி முடிவாகும். காமன்வெல்த் பேங்க் சார்பிலான முத் தரப்பு ஒரு நாள் தொடர் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்து வருகிறது. முத்தரப்பு ஒரு நாள் தொடரில் கோப் பையைக் கைப்பற்ற போட்டியை நடத் தும் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகள் களம் இறங் கி உள்ளன. கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்து வரும் இந்தப் போட்டி விறுவி றுப்பான கட்டத்தில் உள்ளது. ஒரு நாள் தொடரை ஆவலுடன் கண்டு களித்து வரும் ரசிகர்கள் இறுதிச் சுற்றை எதிர் நோக்கி உள்ளனர். இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக நடந்த லீக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 19 புள்ளிகள் பெற்று அந்த அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இதற்கு அடுத்த நிலையில் இலங்கை அணி 2 -ம் இடத்தில் இருந்தது. அந்த அணி 15 புள்ளிகள் பெற்று இந்த இடத் தைப் பிடித்தது. இந்திய அணி 10 புள்ளிகள் பெற்று 3 -வ து இடத்தில் இருந்தது. இதன் பிறகு கடைசி லீக்கில் ஜெயவர்த்தனே தலை மையிலான இலங்கை அணியுடன் மோதியது. 

இந்தப் போட்டியில் இலங்கை அணி 50 ஓவரில் 321 ரன் எடுத்தது. இந்த இலக் கை இந்திய அணி 36.4 ஓவரில் எட்டிய து. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இலங்கை அணியின் ஸ்கோரை இந்திய அணி குறைந்த ஓவரில் எட்டியதால் இந்திய அணிக்கு போனஸ் புள்ளிகள் கிடைத்தது. இதன் மூலம் இந்திய அணி 15 புள்ளி பெற்று இலங்கையுடன் 2 -வ து இடத்தில் இருக்கிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இன்றைய லீக் ஆட்டம் மெல்போர்ன் நகரில் காலை 8.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago