முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா சட்டமன்ற தேர்தல் இன்று வாக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

பனாஜி. மார்ச்.- 3 - கடலோர மாநிலமான கோவாவில் மொத்தம் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு  இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூர், உத்தர பிரதேசம், பஞ்சாப் உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தலில் உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இதே போல உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிந்து விட்டன. இன்று கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கும் தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்ததில்ல 9 பெண்கள், 74 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 215 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாட்டிலேயே முதல் முறையாக கோவா மாநிலத்தில் இன்று நடக்கும் வாக்குப்பதிவின் போது வாக்காளர்களின் புககைப்படம், விரல் ரேகை ஆகியவை கணிணி மூலம் பதிவு செய்யப்படுகிறது.கோவா மாநிலம் முழுவதும்  1612 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு  அவற்றில் 10,644 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில இணை  தேர்தல் அதிகாரி நாராயண் நவ்தி தெரிவித்தார். பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினருடன் 3526 மாநில போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜ.க.- எம்.ஜி.பி.கூட்டணிக்கும் இடைஏயதான் கடுமையான போட்டி இருக்கிறது. கோவா மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற 6 ம் தேதி நடைபெறுகிறது. அன்று நண்பகலுக்குள்ளேயே  இதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்