முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.46 லட்சம் மாட்டுத்தீவன ஊழல்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிவு

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, மார்ச். - 3 - மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டை பதிவு செய்தது சி.பி.ஐ. நீதிமன்றம். இதற்கான உத்தரவை நீதிபதி வி.கே. ஸ்ரீவத்சவா பிறப்பித்தார். லல்லுவுடன் சேர்த்து முன்னாள் முதல்வர் ஜகந்நாத் மிஸ்ரா, ஆளும் ஐக்கிய ஜனதா தள தலைவர் ஜகதீஷ் ஷர்மா, ராஷ்டிரிய லோக்தள கட்சியின் முன்னாள் எம்.பி. ராணா மற்றும்32 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் குற்ற சதியில் ஈடுபடுதல், நம்பிக்கை மோசடி, சாட்சியங்களை கலைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  மாநில கால்நடை துறையின் சார்பில் பங்கா மற்றும் பாகல்பூர் கருவூலங்களில் இருந்து 1994 -96 காலக்கட்டங்களில் போலி ரசீதுகள் மூலம் ரூ. 46 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாகவே இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காலக்கட்டங்களில் லல்லு பிரசாத்தே முதல்வராக பதவி வகித்தார். வழக்கு குறித்து கருத்து தெரிவித்த அவர்,  இந்த வழக்கில் தன்மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டு பதிவு செய்ய ஆளுனரிடமிருந்து சி.பி.ஐ. அனுமதி வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். தீவன கொள்முதலில் ஊழல் செய்வதற்காக சதியில் ஈடுபட்டதாக 2003 ம் ஆண்டு மார்ச் 3 ம் தேதி இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்