முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறை கால சிறப்பு ரயில்கள்

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச். - 3 - கோடை விடுமுறை காலத்தில் பயணிகள் நெரிசலை தவிர்க்க ஏப்ரல் மற்றும் மே, ஜூன் மாதங்களில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது. அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.  சென்னை - மங்களூர் சிறப்பு ரயில், ஏப்ரல் 11 ம்தேதி முதல் ஜூன் 25 ம் தேதி வரை ஒவ்வொரு புதன் கிழமையும் மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் இந்த ரயில்கள் சென்னையில் இருந்து புறப்படும். மங்களூரில் இருந்து வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் சென்னைக்கு திரும்பும். சென்னை - கொல்லம் சிறப்பு ரயில், ஏப்ரல் 9 ம் தேதி முதல் ஜூன் 22 ம் தேதி வரை திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்படும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு திரும்பும். சென்னை கோவை எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 6 ம் தேதி முதல் ஜூன் 25 ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னையில் இருந்தும், திங்கட்கிழமைகளில் கோவையில் இருந்தும் புறப்படும்.  கோவை, ராமேஸ்வரம் ரயில், ஏப்ரல் 7 ம் தேதி முதல் ஜூன் 24 ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் கோவையில் இருந்தும், ஞாயிற்று கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்தும் புறப்படும். சென்னை தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 10 ம் தேதி முதல் ஜூன் 27 ம் தேதி வரை செவ்வாய் கிழமைகளில் சென்னையில் இருந்தும், புதன் கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்தும் புறப்படும். எழும்பூர், திருநெல்வேலி, ஏப்ரல் 5 ம் தேதி முதல் ஜூன் 24 ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்தும், வெள்ளிக் கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்தும் புறப்படும். திருச்சி, எழும்பூர் ரயில் ஏப்ரல் 2 ம் தேதி முதல் ஜூன் 28 ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் திருச்சியில் இருந்தும், செவ்வாய் கிழமைகளில் எழும்பூரில் இருந்தும் புறப்படும். எழும்பூர் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 3 ம் தேதி முதல் ஜூன் 27 ம் தேதி வரை செவ்வாய் கிழமைகளில் எழும்பூரில் இருந்தும், புதன் கிழமைகளில் செங்கோட்டையில் இருந்தும் புறப்படும். திருநெல்வேலி, சென்னை ரயில் ஏப்ரல் 5 ம் தேதி முதல் ஜூன் 29 ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்தும் வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்தும் புறப்படும். நாகர்கோவில், எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 1 ம் தேதி முதல் ஜூன் 25 ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்தும் திங்கட்கிழமைகளில் எழும்பூரில் இருந்தும் புறப்படும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்