முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியாவுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.1.50 கோடி போதை பொருள் சிக்கியது

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, மார்ச்.- 3 - மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை ஏர்ஆசியா என்ற விமானம் வந்தது. இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு புறப்பட்டு செல்ல தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மலேசியா விமானத்தில் ஏறுவதற்காக வந்தனர். அப்போது இமிகிரேசன் போலீசார் அந்த மூன்று பேர்களின் பாஸ்போர்ட்  மற்றும்  பயண சீட்டுகளை வாங்கி ஆய்வு செய்தனர். அதனைதொடர்ந்து அவர்கள் கொண்டுவந்த சூட்கேசை வாங்கி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அலாரம் அடித்தது. அதன்பின்பு சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த சூட்கேசை ஸ்கேன் செய்து பார்த்தனர். அதன் அடிபாகத்தில் கூடுதலாக ஒருஅறை இருந்தது தெரியவந்தது. உடனே சூட்கேசை பிரித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் எபிடிரின் என்ற போதை பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு போலீசார் அந்த போதை பொருளை பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் விசாரணையில் அந்த மூன்று பேர் புதுக்கோட்டை சேர்ந்த ரகுமான், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த லட்சுமி மற்றும் மலர்விழி என தெரியவந்தது. அதிகாரிகளால் பிடிபட்ட அந்த போதை பொருளின் சர்வதேச மதிப்பு ஒரு கோடியே 33 லட்சமாகும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போதை பொருளை கடத்திய 3 பேர்களும் கடத்தல் தொழில் செய்து வருபவர்களா? அல்லது பணத்திற்காக இந்த கடத்தல் செயலில் ஈடுபட்டார்களா? என அதிகாரிகள், போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்