முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியிடம் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த 3 பேர் வீடுகளில் சோதனை

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.- 3 - வீட்டுவசதி வாரிய ஒதிக்கீடுகளை முறைகேடாக பெற்று அதை விதிகளை மீறி அதிக விலைக்கு விற்றதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த துணைகண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள் வீடுகள் மற்றும் அவர்களது பினாமி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் அதிரடி ரைடு நடத்தினர்.இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது இதுப்பற்றி விபரம் வருமாறு,கடந்த தி.மு.க ஆட்சியில் கருணாநிதியின் பாதுகாவலர்களாக இருந்தவர்கள் பாண்டியன்,வினோதன்,கணேசன் இவர்கள் வேலை கருணாநிதி அமர்ந்து வரும் வீல்சேரை தள்ளுவதுதான்.ஆரம்பத்தில் உதவிஆய்வாளராக போன பாண்டியன் மெச்சதகுந்த பணி காரணமாக டி.எஸ்.பி ஆனார்.இதெபோல் வினோதன் ,கணேசன் இருவரும் ஆய்வாளர்களானார்கள்.மேலும் இவர்களது பணியை மெச்சிய கருணாநிதி அவர்களுக்கு முறைகேடாக வீட்டுவசதி வாரியத்தில் 2008​ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த மூவருக்கும்,  தலா 4780 சதுர அடிக்கு, முகப்பேர் ஏரித் திட்டம், உயர் வருவாய்ப் பிரிவில் வீட்டு மனை ஒதுக்கி உத்தரவிட்டார்.மனையின் விலை ரு 75 லட்சம்.ரூ பத்தாயிரம் சம்பளம் பெறும் மூவரும் ஒரே தவணையில் ரூ 75 லட்சத்தை செலுத்தினர். இதுபற்றி   இந்தியா என்ற ஊழல் ஒழிப்பு அமைப்பு ஒன்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு செப்டம்பர் 2009ல் புகார் ஒன்றை அனுப்பியது.ஆனால் அப்போது லஞ்ச ஒழிப்பு துறை அதை கிடப்பில் போட்டதால்   இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ட்ராலி பாய்ஸ் பற்றிய புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் விசாரணை நடத்த உத்தரவிடும் படி சென்னை உயர்nullதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெரும் மூன்று அரசு ஊழியர்கள் ஒரே நாளில் எப்படி 75 லட்சம் கட்டினார்கள். அவர்கள் கடன் வாங்கிக் கட்டியிருக்கலாம், தங்களின் nullர்வீகச் சொத்தை விற்றுக் கட்டியிருக்கலாம்,  ஆனால் இந்த விபரம் விசாரணை செய்தல்லவா கண்டிறியப் பட வேண்டும் ? விசாரணையே நடக்காமல் ஒரு வருடமாக அமைதியாக இருந்தால் எதையோ மறைக்கிறார்கள் என்று தானே பொருள் ? லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை எப்படி நடத்த வேண்டும் என்று கூறும்   புத்தகத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதே அதை ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை பின்பற்றவில்லை என்று கூறி  உச்சnullதிமன்றம் ஊழல் புகாருக்கு ஆளானவர்களில் பாரபட்சம் காட்டாமல் அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பதை சுட்டிக் காட்டி வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஒன்றரை மணி நேரம் வாதிட்டார்.  அரசு வழக்கறிஞர் ஒரு இரண்டு பக்க அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், மனுதாரரின் புகார் டிஜிபியிடம் அனுப்பப் பட்டதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய டிஜிபி இவர்கள் இன்னொருவரோடு கூட்டு ஒப்பந்தம் போட்டு அதன் மூலம் பணம் செலுத்தியிருப்பதால், இவர்கள் மீது எவ்வித விசாரணையும் நடத்த முகாந்திரம் இல்லை என்று கூறியிருப்பதாக கூறப்பட்டது.  டிஜிபி விசாரணை நடத்தி முடித்து விட்டதால், அதன் அடிப்படையில், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று nullதிபதி தீர்ப்பளித்தார். ஆனால் முறைகேடாக வீட்டுமனையை பெற்ற 3 பேரும் அந்த வீடுமனையை பெறுவதற்க்கு முன்பே அந்த மனைகளை முறைகேடாக விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்து விட்டனர். டி.எஸ்.பி பாண்டியன்   அவருக்கு 75 லட்ச ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்த இடத்தை கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே தொண்ணூறு லட்சத்திற்கு விற்றுவிட்டதாக கூறப்பட்டது.இதேபோல் ஆய்வாளர்கள் வினோதன்,கணேசன் இருவரும்   தங்களுக்கு ஒதுக்கப் பட்ட மனையை சண்முகம் என்பவரின் மனைவி கவுரி என்பவருக்கு, ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்துக்கு விற்கிறார். கணேசன் என்ன செய்கிறார். அவரும் கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே  தொண்ணூறு   லட்சத்திற்கு விற்றதாக கூறப்பட்டது. ஒரே நாளில் கை மாத்தி விட்டதுக்கு, இவங்க மூனு பேருக்கும் லாபம் தலா ஒரு கோடியே பதினைந்து லட்சம்.   . இந்த புகாரின் அடிப்படையில் இன்று 3 பேரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். டி.எஸ்.பி. பாண்டியனின் வீடு மயிலாப்nullர் கச்சேரி ரோட்டில் உள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குடியிருப்பில் அவர் வசித்து வருகிறார்.  நேற்று காலை 7 மணியில் இருந்து அங்கு சோதனை நடத்தப்பட்டது இன்ஸ்பெக்டர்கள் கணேசன், வினோதன் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் கணேசனுக்கு சொந்தமாக நெசப்பாக்கம் பஜார் தெருவில் ஒரு வீடும், கே.கே. நகர் போலீஸ் நிலையம் அருகில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடும் உள்ளது. இந்த 2 இடங்களிலும், டி.எஸ்.பி. சுதாகர் தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.   கே.கே.நகர் 9​வது செக்டாரில் 49​வது தெருவில் உள்ள இன்ஸ்பெக்டர் வினோதனின் வீடு மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை இவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கிய பத்மா, கவுரி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. கவுரியின் வீடு nullலாங்கரையிலும், பத்மாவின் வீடு ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் ரோட்டிலும் உள்ளது.  இந்த சோதனையின்போது வீட்டில் இருந்த வர்களிடம் விசாரணை நடத்தி தேவையான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்தனர். வீட்டு வசதி குடியிருப்பு முறைகேடு மற்றும் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகிய புகார்களின் அடிப்படையிலேயே 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலிசார் பிரிவு 120(பி),420 ,109 மற்றும் 13(1)டி,13(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த சோதனையை நடத்தி உள்ளனர்.இந்த சோதனையின் போது ஏராளமான சொத்து ஆவணங்கள் மற்றும் ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் அளவுக்கு அதிகமாக முறை கேடாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது இதையடுத்து, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியின் போது முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. இதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தர விடப்பட்டது. இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார். போலீஸ் துறையில் இன்ஸ் பெக்டர்கள் முதல் கூடுதல் டி.ஜி.பி.க்கள் அந்தஸ்திலான அதிகாரிகளும் இந்த முறைகேடு புகாரில் சிக்கினர். அவர்கள் அனைவரது வீடுகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. தற்ப்போது வீட்டு மனையை முறைகேடாக வாங்கிய பத்மா மற்றும் கவுரி இருவரும் அந்த வீட்டுமனையை மேலும் கூடுதல் விலைக்கு பாலு என்பவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. தற்ப்போது அந்த இடத்தை வாங்கிய பாலு என்பவர் அந்த இடத்தில் 4 கிரவுண்டில் அழகிய பங்களா கட்டிவருவதாக கூறப்படுகிறது.மீதி 2 கிரவுண்டு அழகிய புல்வெளிகளுடன் அல    ங்காரமாக இருக்குமாம்.இத்தனை முறைகேடுகளுக்கும் தானும் ஒரு காரணமாக இருக்கும் கருணாநிதி இதற்க்கு முன்பும் இதேபோல் 1989​ல் தமிழக முதலமைச்சராக இருந்த போது, அவருக்கு அப்போது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த, உபேந்திரன் மற்றும் பிஎஸ்.சேதுராமன் ஆகிய இரண்டு ஆய்வாளர்களுக்கும், அண்ணா நகரில் தலா ஒரு க்ரவுண்டு நிலம் வழங்கியவர் என்பது குறிப்பிடதக்கது.

படவிளக்கம்:
கருணாநிதியிடம் டி.எஸ்.பி ஆனதற்காக வாழ்த்து பெரும் பாண்டியன் மற்றும் கருணாநிதிக்கு ட்ராலி தள்ளும் ஆய்வாளர் வினோதன்,கணேசன் ஆகியோரை படத்தில் காணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்