முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் ராஜஸ்தான் கலைவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச்.- 3 - மதுரையில் ராஜஸ்தான் கலைவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராஜஸ்தான் சுற்றுலாத்துறை செய்துள்ளது.  கலாச்சாரத்தின் தலைநகரான மதுரையில்  பாலைவன மாநிலமான ராஜஸ்தான் மாநில சுற்றுலா துறை தமிழக பயணிகளை கவரும் வகையில் ராஜஸ்தான் அழைக்கிறது என்ற மூன்று நாள் கலைவிழா மற்றும் கண்காட்சியினை மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள பார்ச்சூன் பாண்டியன் ஓட்டலில் நேற்று துவங்கியது. இந்த விழா இந்தியாவில் 22 முக்கிய நகரங்களில் நடக்கிறது. இது குறித்து ராஜஸ்தான் மாநில அரசின் சுற்றுலா துறை கூடுதல் இயக்குனர் சோம்நாத் மிஸ்ரா, உதவி அதிகாரி மான்சிங் ரத்தோர் ஆகியோர் மதுரையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது, ராஜன்தான் மாநிலத்தை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளவும், கலை இலக்கியம் கலாச்சாரம் பற்றி மதுரை வாழ் மக்கள் உணர்ந்து கொள்ளவும் இந்த விழா நடக்கிறது. மேலும் ராஜஸ்தான்மாநில கலைநயம மிக்க பொருட்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கு கண்காட்சியும் நடத்தப்படுகிறது.  ராஜஸ்தான் மாநில உணவு வகைகளின் சுவையை அறியவும், பல வகையான சமையலும் இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன. விழாவில் ராஜஸ்தான் மாநில நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. ராஜஸ்தான் மாநில  உணவு வகையான தால்பட்டிசூர்மா, கச்சோரிஸ், மிர்ஷிபாடா மற்றும் இனிப்பு வகைகளும் இடம்பெறுகின்றன. மேலும் கிராமிய நடனமான லங்கஸ் டெரடோலி போன்றவைகளும் இடம்பெறுகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கைவினைஞர்கள் தயாரித்து கைவினை பொருட்கள் 20 அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2010 ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 13.78 லட்சம் பேரும், உள்நாட்டிலிருந்து 2.55 கோடி பேரும் ராஜஸ்தானுக்கு சுற்றுலா பயணிகளாக வந்து சென்றுள்ளனர். வளமையான கலாச்சாரம், கோட்டைகள், அரன்மனைகள், ஏரிகள், வண் மயமான கலைவிழாக்கள், கண்காட்சிகள்,தங்க நிறத்தில் ஜொலிக்கும் மணல் பரப்புக்கள், வன விலங்குகள், சாகச விளையாட்டுக்கள், கைவினை பொருட்கள், கடைவிரிப்புக்கள், சுற்றுலா பயணிகள் உபசரிப்பு போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த வருகின்றன. இது தவிர சர்வதேச தரம் வாய்ந்த ஓட்டல்கள்,சொகுசி ரயில், திரைப்பட படப்பிடிப்பு இடங்களான ஜெய்ப்பூர், ஜெய்சல்மார்க், உதய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் போன்ற நகரங்களை பயணிகளை கவர்கின்றன. இந்தியாவின் தங்க முக்கோண சுற்றுலா பாதை ஜோத்பூரை இணைக்கிறது. அத்தோடு ஆன்மீக சுற்றுலாவிற்கு ராஜஸ்தான் மாநிலம் வழி வகுக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்