முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு 2 -வது கட்ட சிகிச்சைமுடிந்தது

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, மார்ச். - 3 - இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங்கிற்கு 2 -வது கட்ட கீமோதெரபி சிகிட்சை முடிந்ததாக ட்வீட்ஸ் இணையதளத்தில் செய்தி வெ ளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கிற் கு நுரையீரலில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார். யுவராஜ் சிங்கின் நுரையீரல் புற்று நோய்க்கு பாஸ்டனில் உள்ள மருத்துவ மனை கீமோதெரபி என்ற சிகிட்சை யை அளித்து வருகிறது. இதன் முதல் கட்ட சிகிச்சை கடந்த மாதம் முடிந்தது.
முதல் கட்ட சிகிச்சையில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்கு யுவராஜூம் நல்ல ஒத்துழைப்பை அளி த்தார். இந்த நிலையில் அவருக்கு 2-வது கட்ட சிகிச்சை அதே மருத்துவமனையில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.  இது குறித்து ட்வீட்ஸ் இணையதளம் சார்பில் கேட்ட போது, எனது 2-வது கட்ட கீமோதெரபி சிகிச்சை முடிவ டைந்தது. தற்போது எனது உடல் சற்று பலவீனமாக உள்ளது.  அடுத்ததாக 7 -ம் தேதி ஸ்கேன் எடுக்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.  கடந்த மாதம் முதல் யுவராஜ் சிங் பா ஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் மே மாத ம் மீண்டும் விளையாடுவார் என்று டாக் டர்கள் கூறியிருந்தனர். ஜனவரி மாதம் அமெரிக்கா சென்ற யுவ ராஜ் சிங்கிற்கு சிகிச்சைக்காக மொட்டை அடிக்கப்பட்டு உள்ளது. மார்ச் மா தம் வரை அவர்  இதே தோற்றத்தில் தான் இருப்பார். அவருக்கு ஏப்ரல் மா தம் மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்ப டும்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் 2 ல் யுவராஜ்சிங் பங்கேற்றார்.
அதன் பின்பு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு பின் அவர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. சிகிட்சையில் கவனம் செலுத்தினார்.
பஞ்சாப் வீரரான யுவராஜ் சிங் கடந்த 2000 -ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அவர் இதுவரை 274 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று 8,051 ரன்னைக் குவித்து இருக்கிறார்.
தவிர, 37 டெஸ்ட் போட்டிகளில் கலந் து கொண்டு மொத்தம் 1,775 ரன்னை எடுத்து இருக்கிறார். உலகக் கோப்பை போட்டியில் அவர் சிறந்த வீரராக தேர் வு செய்யப்பட்டார். இதில் 9 ஆட்டத்தி ல் பங்கேற்று 362 ரன்னையும், 15 விக்கெட்டையும் கைப்பற்றினார்.
அமெரிக்காவில் சிகிட்சை பெற்று வரு ம் யுவராஜ் சிங்கை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சுழற் பந்து வீச் சாளருமான அனில் கும்ளே சந்தித்து விரைவில் குணமடைய தனது வாழ்த்து களை தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்