முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை முடிவுக்கு வருமா?

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 3 - எல்.பி.ஜி.டேங்கர் லாரிகள் எண்ணை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளை இயக்கி வருகின்றன. இந்த லாரிகளுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை வாடகை ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிந்து விட்டது. புதிய ஒப்பந்தத்திற்காக டெண்டர் கோரப்பட்டதில் 4,200 கியாஸ் டேங்கர் லாரிகள் கலந்து கொண்டன. ஆனால் பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் கியாஸ்  டேங்கர் லாரிகளுக்கு புதிய வாடகை ஒப்பந்தத்தை அமல்படுத்த மறுத்து வந்தது. இதனால் நேற்று முன்தினம் முதல் எம்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஒடவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் 3,200 லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றிச்செல்லும் பணி அடியோரு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையல் மத்திய அரசு எண்ணை நிறுவனங்களின் அதிகாரிகள் தமிழக அரசின் உணவுத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலாவை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்கள். பின்னர் தலைமை செயலாளர் தேபேந்தரநாத் சாரங்கியையும் சந்தித்தனர். இதில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களை அழைத்து பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அறிவுரை வழங்கப்பட்டது. இதன் படி சென்னை எழிலகத்தில் இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் டேங்கர் லாரி உரிமையாளர்கள், எண்ணை நிறுவனங்களின் அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கும் வகையில் முத்த ரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் கார்த்திக் கூறியதாவது:- பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து விட்ட காரணத்தாலும், டிரைவர் - கிளீனர் சம்பளம் அதிகரித்துள்ளதாலும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நஷ்டப்படும் அளவுக்கு சம்பள ஒப்பந்தம் உள்ளது. இதை அதிகரித்து தந்தால்தான் நாங்கள் தொழில் நடந்த இயலும். மேலும் கூடுதல் டேங்கர் லாரிகளை ஒப்பந்தத்தில் சேர்க்கவும் வலியுறுத்தி இருக்கிறோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டால் லாரி ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவோம். எண்ணை நிறுவன அதிகாரிகள்தான் உடன்பாடுக்கு ஒத்து வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago